ஜாக்கிரதை மக்களே.. ஷூவிற்குள் இருந்த குட்டி நாகப்பாம்பு!

By

Published : Jun 29, 2023, 2:08 PM IST

thumbnail

கர்நாடகா மாநிலம் தார்வாடு மேடரா ஓனி பகுதியைச் சேர்ந்தவர் நந்திதா ஷிவான கவுடா. இவர் நேற்று வீட்டின் முன் வேலை பார்த்து கொண்டிருந்துள்ளார். அப்போது, வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த காலணியில் ஏதோ ஊறுவது போல தோன்றி உள்ளது.

இந்த நிலையில், அங்கிருந்த ஷூவில் பாம்பு ஒன்று இருப்பதை உணர்ந்தார், நந்திதா. இதனையடுத்து, அவர் உடனடியாக பாம்புபிடி வீரர் யெல்லப்பா ஜோடல்லியை வரவழைத்துள்ளார். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த அவர், மீட்பு பணியைத் தொடங்கினார். அதன் உள் குட்டி நாகபாம்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

பின்னர் பாம்புபிட் வீரர் யெல்லப்பா ஷூவை தூக்கியபோது, அந்த குட்டி நாகப்பாம்பு தனது வாயை விரித்து கடிக்க முயன்றது. இதனால் அவர்கள் அச்சம் அடைந்தனர். தொடர்ந்து, அவர் ஷூவிற்குள் இருந்த பாம்பினை அவர் பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விட்டார். மழை காலம் என்பதால் பாம்புகள் சூடானப் பகுதியை தேடி வரும் என்றும், அதனால் மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் யெல்லப்பா அங்கிருந்த மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.