"எடப்பாடியார் துரோகத்தின் அடையாளம்": அவதூறு பேசிய இளைஞரின் வீடியோ வைரல்

By

Published : Mar 11, 2023, 7:50 PM IST

thumbnail

மதுரை: சிவகங்கை நகரில் நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மதுரை விமான நிலையம் வருகை தந்தனர்.  

விமானத்திலிருந்து இறங்கி விமான நிலைய ஓடுதளத்திலிருந்து வெளியே வரும் வாகனத்தில் எடப்பாடி பழனிச்சாமி பயணம் செய்த போது, அவருடன் பயணித்த சிங்கம்புணரியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் எடப்பாடி பயணிப்பதாக கூறி நேரலை செய்து கொண்டிருந்தார். அதில், "திடீரென எதிர்க்கட்சித் தலைவர் துரோகத்தின் அடையாளம் அண்ணன் எடப்பாடி உடன் பயணம் செய்கிறேன் என பேசியவர். தொடர்ந்து எடப்பாடியார் துரோகத்தின் அடையாளம், சசிகலாவிற்கு துரோகம் செய்தவர். 10.5% இடஒதுக்கீட்டை தென்னாட்டு மக்களுக்கு எதிராகக் கொடுத்தவர்" எனவும் கூறினார்.

அந்த இளைஞர் தற்போது காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் ஏதேனும் அரசியல் பின்புலம் கொண்டவரா? அல்லது யாரேனும் தூண்டுதலின் பேரில் இவ்வாறு செய்தாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது தீயாக பரவி வருகிறது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.