மயிலாடுதுறையில் ரயில் பெட்டி வடிவில் பிரியாணி கடை திறப்பு.. அடேங்கப்பா..! இவ்வளவு வசதியா..?

By

Published : Jun 5, 2023, 8:14 AM IST

thumbnail

மயிலாடுதுறை:  கூறைநாடு காக்கும் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்-சிவ பார்வதி தம்பதியினர். இவர்கள் நேற்று (ஜூன் 4) நுகர்வோர்களைக் கவரும் வகையில் ரயில் பெட்டி பிரியாணி என்ற பெயரில் கடை ஒன்றைத் திறந்து உள்ளனர். மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகில் ரயில் பயணிகளையும், பொதுமக்களையும் கவரும் வகையில் இந்த பிரியாணி கடையானது ரயில் பெட்டி போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. 

கடையின் உள்ளே சென்று பார்த்தால் ரயிலில் உள்ள இருக்கைகள் போன்று 12 பேர் அமர்ந்து உணவு அருந்தும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கண்கவர் வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டு இரண்டு பக்கமும் எல்.இ.டி டிவி வைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி ரயில் பெட்டியில் உள்ள அபாய சங்கிலி, பைகளை மாட்டுவதற்குக் கொக்கி, உணவு அருந்த வருபவர்கள் லக்கேஜ் வைப்பதற்கான இடம் என அனைத்தும் பொதுமக்களைக் கவரும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

மேலும், குளிர்சாதன வசதியுடன் புதிதாகத் திறக்கப்பட்ட இந்த ரயில் பெட்டி பிரியாணி கடையில் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் நேற்று ஒரு நாள் மட்டும் ஒரு பிரியாணிக்கு ஒரு பிரியாணி என இலவசமாக வழங்கப்பட்டது. இதனால், ஏராளமான பொதுமக்கள் இந்த ரயில் பெட்டி பிரியாணி கடையை ஆர்வமுடன் பார்த்தும், உள்ளே சென்று செல்பி எடுத்தும் மகிழ்ந்து பிரியாணியை வாங்கிச் சென்றனர்.

இதையும் படிங்க: கரந்தை கருணாசாமி ஆலயத்தில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு 'ஏழூர் பல்லக்கு திருவிழா

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.