சொகுசு காரில் 4,000 மதுபாட்டில்கள் கடத்தல்.. 30 கி.மீ சேஸிங் செய்து மடக்கிய காவல்துறை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 15, 2023, 7:10 PM IST

thumbnail

திருப்பத்தூர்: கர்நாடக மாநில மதுபான பாட்டில்களை சொகுசு காரில் கடத்தி வருவதாக வாணியம்பாடி மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் வாணியம்பாடி மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் வாணியம்பாடியில் சோதனை சாவடியில் தடுப்புகள் அமைத்து அவ்வழியாக வரும் வாகனங்களை சோதனை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த கார் காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்புகளை உடைத்து சென்றது. இந்நிலையில் காரை மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினர் விரட்டி பிடிக்க முயன்றனர். மேலும் அந்த சொகுசு கார் ஆம்பூர் பேர்ணாம்பட்டு வழியாக சென்றதால் இதுகுறித்து உமராபாத் காவல்துறையினருக்கு காரை பிடிக்கச்சொல்லி தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட எல்லைப்பகுதியான மாச்சம்பட்டு பகுதியில் உள்ள சோதனை சாவடியில் காவல்துறையினர் தடுப்புகளை வைத்தும், கார் அதையும் உடைத்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உடனடியாக வேலூர் மாவட்ட காவல்துறையினருக்கு இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து 30 கிலோ மீட்டர் தூரம் போக்கு காட்டிய நபர்கள் கொத்தூர் பகுதியில் உள்ள வனப்பகுதி வழியாக சென்று காரை நிறுத்திவிட்டு அங்கிருந்த தப்பியோடியுள்ளனர். இதனை தொடர்ந்து மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினர் மற்றும் உமராபாத் காவல்துறையினர் காரில் இருந்த சுமார் 1 லட்சம் மதிப்பிலான 4000 கர்நாடக மாநில மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து காரில் இருந்து தப்பியோடிய நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.