ETV Bharat / sukhibhava

உடல்நலனைக் கெடுக்கும் காற்று மாசுபாடு; நுரையீரலை வலுப்படுத்தும் யோகாசனங்கள்..!

author img

By

Published : Nov 4, 2022, 5:59 PM IST

தேசிய தலைநகர் முழுவதும் பனி மூட்டம் போல் காற்று மாசு சூழ்ந்துள்ளதால், காலை நடைபயிற்சி செய்வதற்குக்கூட வெளியே செல்ல விரும்புவதில்லை. இதனால் வீட்டில் இருந்தபடியே யோகாசனப் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.

நுரையீரலை வலுப்படுத்தும் யோகாசனங்கள்
நுரையீரலை வலுப்படுத்தும் யோகாசனங்கள்

டெல்லி: தேசியத் தலைநகர் பகுதியில் நிலவும் மிகவும் மோசமான காற்றுத்தரக் குறியீடு (AQI) காரணமாக மக்கள் சுவாசப் பிரச்னைகளை அனுபவித்து வருகின்றனர். டெல்லியில் மோசமான காற்றின் தரம் மக்களை வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டியநிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சில நிபுணர்கள் வீட்டில் இருந்தபடியே ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரிக்க உதவும் யோகா குறிப்புகளை பரிந்துரைக்கின்றனர்.

யோகா நிபுணர் ரிச்சா சூட், ஆரோக்கியமாக இருப்பதற்கான உதவும் யோகா குறிப்புகளை வழங்கும்போது, பாஸ்த்ரிகா, கபாலபதி, பைஹ்யா மற்றும் அனுலோம் விலோம் ஆசனங்களைப் பயிற்சி செய்வது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரிக்க உதவுகிறது என்றார். பாஸ்த்ரிகா யோகா ஆசனம் செய்வது நுரையீரல் திறனை பலப்படுத்துகிறது.

அனுலோம் விலோம் பயிற்சி செய்வதன் மூலம் ஏற்படும் நேர்மறையான விளைவுகளைப்பற்றி சூட்,"இந்த யோகா ஆசனம் நுரையீரலில் குவிந்துள்ள நச்சுகள் மற்றும் அதிகப்படியான திரவத்தை அகற்ற உதவுகிறது. தவிர, நுரையீரலுக்கு ஆக்ஸிஜனேற்றப்பட்ட ரத்த ஓட்டத்தைப்பராமரிப்பதில் அனுலோம் விலோம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது தவிர, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நுரையீரலின் திறனை அதிகரிக்கவும் உதவுகிறது" என்றார்.

பாஹ்யா பிராணயாமம் நுரையீரலுக்கும் நன்மை பயக்கும். பாஹ்யா பிராணயாம பயிற்சி செய்வது நுரையீரலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.

பிரிட்டிஷ் மருத்துவ கவுன்சிலின் முன்னாள் ஆராய்ச்சியாளரும், ஸ்வீடனில் உள்ள உப்சாலா பல்கலைகழகத்தின் பேராசிரியருமான டாக்டர் ராம் எஸ் உபாத்யாய், டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் காற்று மாசுபாடு குறித்து பேசுகையில், "இது கவலைப்படுவதற்கு ஒரு முக்கியக்காரணமாக உள்ளது. தற்போது, PM 2.5 செறிவு நிலை டெல்லியை விட 25 மடங்கு அதிகமாக உள்ளது. எனவே, டெல்லியில் காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராடும் மனித உடலுக்கு யோகாசனங்கள் செய்வது பயனுள்ளதாக இருக்கும்" என்றார்.

இதையும் படிங்க: விழிப்புணர்வுடன் இருந்தால் நுரையீரல் புற்றுநோயை தடுக்கலாம்...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.