ETV Bharat / sukhibhava

இன்று சர்வதேச உடல் உறுப்புகள் தான தினம்!

author img

By

Published : Aug 13, 2020, 12:21 PM IST

உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், சர்வதேச உடல் உறுப்புகள் தான தினம் ஆகஸ்ட்13ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

WORLD ORGAN DONATION DAY " on 13TH AUGUST WORLD ORGAN DONATION DAY ORGAN DONATION 13TH AUGUST வாழ்க்கை நன்கொடை தானம் இன்று உடல் உறுப்புகள் தான தினம் சர்வதேச உடல் உறுப்புகள் தான தினம் உடல் உறுப்புகள் தானம் இயற்கை மரணம் மூளைச் சாவு brain death
WORLD ORGAN DONATION DAY " on 13TH AUGUST WORLD ORGAN DONATION DAY ORGAN DONATION 13TH AUGUST வாழ்க்கை நன்கொடை தானம் இன்று உடல் உறுப்புகள் தான தினம் சர்வதேச உடல் உறுப்புகள் தான தினம் உடல் உறுப்புகள் தானம் இயற்கை மரணம் மூளைச் சாவு brain death

ஹைதராபாத்: உடல் உறுப்புகள் தானம் மனிதாபிமானத்தின் உச்சமாக பார்க்கப்படுகிறது. நீங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் எட்டு பேருக்கு வாழ்வளிக்க முடியும். அதேபோல் தோல் தானத்தின் மூலம் ஒரு நபருக்கு 50 விழுக்காடு வாழ்வு அளிக்கலாம்.

எனினும் இந்த உடல் உறுப்பு தானம் குறித்து பல்வேறு சந்தேகங்கள், அச்சங்கள் மக்களிடையே இயல்பாகவே காணப்படுகிறது.

இதற்கிடையில் ஒவ்வொரு ஆண்டும், உலகில் ஐந்து லட்சம் மக்கள் சரியான உடல் உறுப்புகள் தானம் கிடைக்காமல் உயிரிழக்கின்றனர் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

ஆகையால் யார் யார் உடல் உறுப்புகள் தானம் அளிக்கலாம் என்பது குறித்து தேசிய சுகாதார மையம் (National Health Portal- NHP) கோடிட்டு காட்டுவதை பார்க்கலாம்.

  1. சாதி, மதம், சமூகம் என எதையும் பொருட்படுத்தாமல் அனைவரும் உடல் உறுப்பு தானம் அளிக்கலாம்.
  2. உறுப்புகளை தானம் செய்வதற்கு வரையறுக்கப்பட்ட வயது என்று எதுவும் இல்லை. ஆனாலும் இது கடுமையான மருத்துவ அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டது.
  3. 18 வயதுக்கு உட்பட்ட மைனர் (சிறார்கள்) உடல் உறுப்பு தானம் செய்ய பெற்றோர் அல்லது பாதுகாவலர் அனுமதி பெற வேண்டும்.
  4. புற்றுநோய், ஹெச்.ஐ.வி., நிரீழிவு நோய், சிறுநீரக குறைபாடுகள் மற்றும் இதயப் பிரச்னைகள் மற்றும் தீராத நோயினால் அவதியுறுவோர் உடல் உறுப்புகள் தானம் செய்வதில் தடை ஏற்படலாம்.

தானம் செய்யக்கூடிய உறுப்புகள்

இயற்கை மரணம்

  • கார்னியா உள்ளிட்ட திசுக்கள்
  • இதய வால்வுகள்
  • தோல்
  • எலும்புகள்

மூளைச் சாவு

  • இதயம்
  • சிறுநீரகம்
  • கல்லீரல்

இந்தக் கட்டுரையை ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே சொடுக்கவும்

  • குடல்
  • நுரையீரல்
  • கணையம்

தற்போதைய காலக்கட்டத்தில் கைகள் கூட வெற்றிகரமாக தானமாக அளிக்கும் ஏற்பட்டுள்ளது. ஆயினும் இது பாதிக்கப்பட்ட நபரின் உடல் உறுப்புகளின் நிலையை பொருத்தது.

வாழ்க்கை நன்கொடை தானம்

ஒருவர் வாழும் போதும் இந்த உடல் உறுப்புகளை தானமாக அளிக்கலாம்.

  • ஒரு சிறுநீரகம்
  • ஒரு நுரையீரல்
  • கல்லீரலின் ஒரு பகுதி
  • கணையத்தின் ஒரு பகுதி
  • குடலின் ஒரு பகுதி

உடல் உறுப்புகள் தானம் தொடர்பான மூடநம்பிக்கைகள் சில

உடல் உறுப்புகள் தானம் தொடர்பாக சமூகத்தில் பரவியுள்ள பொதுவான சில மூடநம்பிக்கைகள் வருமாறு:

மருத்துவ பிரச்னை இருந்தால் ஒருவர் நன்கொடையாளராக இருக்க முடியாது:

வயது மற்றும் மருத்துவ நிலையைப் பொருட்படுத்தாமல் யார் வேண்டுமானாலும் உடல் உறுப்பு நன்கொடையாளராக பதிவு செய்யலாம். இறப்பு நேரத்தில்தான் நன்கொடை செயல்முறை மேற்கொள்ள முடியுமா என்பதை மருத்துவக் குழு முடிவு செய்யும். இருப்பினும், நீங்கள் உறுப்புகள் அல்லது திசுக்களை தானம் செய்ய முடியும்.

உடல் உறுப்பு தானத்திற்கான நன்கொடையாளரின் குடும்பத்திடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது:

உடல் உறுப்பு தானம் செய்வதற்கு நன்கொடையாளரின் குடும்பத்திடம் ஒருபோதும் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.

என் உயிரைக் காப்பாற்றுவதை மருத்துவர்கள் எளிதில் கைவிடுவார்கள்:

எந்தவொரு சூழ்நிலையிலும் ஒரு நபரின் உயிரைக் காப்பாற்றுவதில்தான் ஒவ்வொரு மருத்துவரும் முன்னுரிமை அளிப்பார். ஒரு நபர் மூளைச்சாவு அடைந்துவிட்டால் மட்டுமே நன்கொடை நடக்கும். மேலும், சிகிச்சை அளிக்கும் மருத்துவ குழுவும், உடல் உறுப்பு தான அறுவை சிகிச்சை குழுவும் வெவ்வேறாக இருக்கும்.

நான் வயது முதிர்ந்தவன்/ பலவீனமானவன் / நல்ல ஆரோக்கியத்துடன் இல்லை, என் உறுப்புகளை யாரும் விரும்ப மாட்டார்கள்:

இது குறித்தும் நாம் ஏற்கனவே தெளிவுப்படுத்தி உள்ளோம். உடல் உறுப்பு தானத்துக்கு வயது ஒரு தடையில்லை. உடல் உறுப்பு தானத்துக்கு ஏற்றதா? இல்லையா என்பதை மருத்துவ குழுவினர் முடிவு செய்வார்கள். ஆகவே அதற்கு முன்னரே உங்களை நீங்களே தகுதி நீக்கம் செய்ய வேண்டாம்.

உங்கள் உறுப்புகளை தானம் செய்வதும், ஒருவருக்கு புதிய வாழ்க்கையை பரிசளிப்பதும் நீங்கள் செய்யக்கூடிய மிகச் சிறந்த செயல்களில் ஒன்றாகும்.

இந்தச் செயல்முறை உடலை சிதைக்காமல் நிபுணர்களால் மேற்கொள்ளப்படுகிறது. ஆகையால் இந்த உன்னதமான செயல் குறித்து மக்களை யாரும் பயமுறுத்த வேண்டாம்.!

இதையும் படிங்க: மூளைச்சாவு அடைந்த கவுரவ விரிவுரையாளர் உடல் உறுப்புகள் தானம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.