ETV Bharat / sukhibhava

ட்ரை ப்ரூட்ஸ் சாப்பிடுவதால் புற்றுநோயை தடுக்க முடியுமா..?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 14, 2023, 7:21 PM IST

Eating dry fruits can prevent cancer in Tamil: ட்ரை ப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ட்ரை ப்ரூட்ஸ் சாப்பிடுவதால் புற்றுநோயை தடுக்கலாம்
ட்ரை ப்ரூட்ஸ் சாப்பிடுவதால் புற்றுநோயை தடுக்கலாம்

சென்னை: விலை உயர்வான பொருள் என்றால் அதற்கு எப்போதுமே மவுசும் அதிகம், அதன் பயனும் அதிகம். அப்படியாக தான் எல்லா பொருட்களும் உள்ளது. இதில் நாம் உண்ணும் உணவுப்பொருட்களும் அடக்கம். அதில் ஒன்று தான் ட்ரை ப்ரூட்ஸ். உடல் எடையைக் குறைக்க என்று டயட்காக பயன்படுத்தும் அப்படி என்ன பயன்கள் உள்ளது என்று யோசிக்கிறீர்களா?.ட்ரை ப்ரூட்ஸ் மற்றும் நட்ஸில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, புற்றுநோய் மற்றும் இதயநோய் தொடர்பான பிரச்சினைகளை குறைக்க உதவுகிறது.

மேலும் நட்ஸ்களில் உள்ள காமா டோகோபெரோல் புற்றுநோய்களை உண்டாக்கும் உயிரணுக்களின் வளர்ச்சியை தடுக்கிறது. ட்ரை ப்ரூட்ஸ் மற்றும் நட்ஸில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளும், டெர்பென்ஸ், அந்தோசயனின், கூமரின், சாந்தோன்ஸ், கரோட்டினாய்டுகள் மற்றும் பிற பைட்டோ கெமிக்கல்களும் உள்ளன. இவை புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராடுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

அக்ரூட் பருப்பு (Walnuts): அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் நடத்திய ஆய்வில், அனைத்து நட்ஸ்களும் புற்றுநோய்க்கு எதிரான பண்புகளை கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. வால்நாட்ஸில் உள்ள பெடுங்குலாஜின் உடலில் யூரோதின்களாக மாற்றப்படுகிறது. இவை உடலில் ஈஸ்ட்ரோஜன் ஏற்பிகளுடன் இணைந்து மார்பக புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது.

உலர் திராட்சை (Raisins): திராட்சை பழங்களை விட உலர் திராட்சையில் அதிக பீனாலிக்ஸ் உள்ளது. தினமும் உலர் திராட்சை சாப்பிடுவது வளர்சிதை மாற்றங்களை குறைப்பதோடு, புற்றுநோயை உண்டாக்கும் உயிரணுக்களின் வளர்ச்சியை மெதுவாக்குகிறது. மேலும் புற்றுநோய் செல் பிரிவை அடக்குவதற்கும் உதவுகின்றன.

உலர் பிளம்ஸ் (Prunes): உலர் பிளம்ஸ்களில் கார்போலின் மற்றும் பீனாலிக் பொருட்களின் ஆல்கலாய்டுகள் உள்ளன. இவை வயிறு மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கின்றன.

உலர்ந்த அத்திப்பழம் (Dried Fig): உலர்ந்த அத்திப்பழத்தில் நார்ச்சத்து, கரிம அமிலங்கள், விட்டமின்கள், தாதுக்கள், பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் பாலிபினால்கள் உள்ளன. இவை உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராட உதவுகிறது. இதன் காரணமாக மார்பக புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்கள் ஏற்படுவதை தடுக்கலாம்.

இதையும் படிங்க: பழங்களில் ஃபேஸ் பேக் ட்ரை பண்ணி பாருங்க..உங்க முகம் தங்கம் மாதிரி சும்மா தகதகன்னு மின்னும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.