வெற்றிலை பாக்குப் போடுவது நல்லதா? கெட்டதா? மருத்துவர்கள் கூறுவது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Desk

Published : Nov 14, 2023, 6:06 AM IST

வெற்றிலை

Betel Leaves Health Benefits In Tamil: வெற்றி பாக்குப் போடும் கலாச்சாரம் கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து வரும் நிலையில், என்னதான் இருக்கிறது இந்த வெற்றிலை பாக்கில் என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சென்னை: "தாம்பூலம்" மங்கள காரியங்கள் முதல் ஒரு மனிதனின் பிறப்பில் இருந்து இறப்பு வரை அனைத்திலும் முதன்மையாக இருப்பது வெற்றிலை பாக்குதான். இந்த வெற்றிலை பாக்குப் போடும் கலாச்சாரத்தை தமிழினம்தான் உலகிற்கு முதன்மை படுத்தியது என்ற வரலாற்று சான்றுகளும் உள்ள நிலையில் இன்றைய தலைமுறை வெற்றிலை பாக்குப் போடும் கலாச்சாரத்தையே மறந்து விட்டது எனக்கூறலாம்.

வெற்றிலை போட்டால் கேன்சர் வரும், பற்களில் கரை ஏற்படும், படிப்பு அரவே வராது, மறதி ஏற்படும் என பல கருத்துக்கள் சமூகத்தில் உலா வரும் நிலையில் அது உண்மையா? இல்லையா? என்று என்றாவது சிந்தித்தது உண்டா? வெற்றிலை பாக்குப் போட்டு வாழ்ந்து வந்த நம் முன்னோர்களுக்கு கேன்சர் வரவில்லையே... அவர்களது அறிவிலும் குறைபாடு இல்லையே? பிறகு ஏன் இந்த நவீன பிற்போக்கு சிந்தனைகள்.

நீங்கள் கேட்கலாம், வெற்றிலை போட்டு, வாய் புற்றுநோய் வந்தவர்களையும் நாங்கள் பார்த்திருக்கிறோம். அப்போ அது உண்மை தானே என்று. வெற்றிலை போட்டு வாய் புற்றுநோய் வந்தவர்கள், வெற்றிலையுடன் புகையிலையையும் சேர்த்து சாப்பிட்டனர். அதனால் வாய் புற்றுநோய் ஏற்பட்டது.

வெற்றிலை, சுண்ணாம்பு, பாக்கு வைத்து சாப்பிடுபவர்களுக்கு என்றும் புற்றுநோய் வராது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். வெற்றிலையில் பல நன்மைகள் உள்ளன. வெற்றிலையில் ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும் சுரப்பிகளுக்கான நலன் தரும் தன்மை இருக்கிறது. அதனால் தான் நம் முன்னோர்கள் சாப்பிட்டு முடித்தவுடன் வெற்றிலையை மெல்லுவர். இதன் காரணமாகவே திருமணம் போன்ற விழாக்களில் வெற்றிலை முதன்மையாக வைக்கப்படுகிறது.

வெற்றிலை பாக்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்: வெற்றிலையில் நீர்ச்சத்து, புரதச்சத்து, இரும்பு சத்து, கால்சியம், தயமின், விட்டமின் சி போன்றவை உள்ளன. நோய் எதிர்ப்பு திறன் கொண்ட சவிக்கால் என்னும் பொருளும் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

வெற்றிலை பாக்கு மென்றால் சுவாச நோய்களான ஆஸ்துமா, இருமல், சளி போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். மூளையும் சுறுசுறுப்பாக இருக்கும். வெற்றிலையுடன் சுண்ணாம்பு சேர்த்து சாப்பிடுவதால் கால்சியம் சத்து நேரடியாக நம் உடலுக்கு கிடைக்கும். இதனால் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் எதுவும் வராது. மேலும் வாயுத் தொல்லை பிரச்சினையும் ஏற்படாது.

வெற்றிலையை எப்படி சாப்பிட வேண்டும்:

  • மூன்று வேளையும் வெற்றிலையோடு கொட்டை பாக்கும், சுண்ணாம்பும் சேர்த்து சாப்பிட்டால் எந்த பாதிப்புகளும் நேராது. வெற்றிலையோடு புகையிலை சேர்த்து சாப்பிடும் போது பிரச்சினைகள் ஏற்படும்.
  • வெற்றிலையை சாப்பிடும் போது, அதன் காம்பு, நுனி, நடு நரம்பு போன்றவற்றை நீக்கி விட்டு சாப்பிட வேண்டும்.
  • வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு போன்றவற்றை சரியான விகிதத்தில் எடுத்து கொள்வது அவசியம்.
  • காலையில் வெற்றிலையை சாப்பிடும் போது பாக்கின் அளவை சற்று அதிகரித்துக் கொள்ளலாம். துவர்ப்பு சுவை கொண்ட பாக்கு, வயிற்றை சுத்தப்படுத்த உதவும். மேலும் மலமிளக்கியாகவும் செயல்படும்.
  • மதியம் வெற்றிலை சாப்பிடும் போது, சுண்ணாம்பின் அளவை சற்று அதிகரித்துக் கொள்ளலாம். இது செரிமானத்திற்கு உதவும். உடலுக்குத் தேவையான கால்சியம் சத்தும் கிடைக்கும்.
  • இரவில் வெற்றிலை போடும் போது, வெற்றிலையின் அளவை சற்று அதிகரித்துக் கொள்ளலாம். இது பற்களில் கிருமிகள் சேராமலும், வாய் துர்நாற்றத்தைப் போக்கவும் உதவுகிறது. மேலும் பல் பிளேக் நோய் (பற்களில் படியும் அடற் கரை) போன்றவை ஏற்படாமல் இருப்பதற்கும் உதவுகிறது.

இதையும் படிங்க: திடீர் நெஞ்சு வலி.. பூச்சாண்டி காட்டும் வாயுத்தொல்லை: தீர்வு என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.