ETV Bharat / sukhibhava

கரோனா வைரஸை எதிர்த்து போராடும் தடுப்பூசி வகைகள்!

author img

By

Published : May 8, 2020, 7:33 PM IST

Updated : May 21, 2020, 4:52 PM IST

ஹைதராபாத்: கரோனா உள்ளிட்ட வைரஸ்களுக்கான தடுப்பூசி வகைகள், அதன் செயல்பாடு மற்றும் அதன் வளர்ச்சி படிநிலைகள் குறித்து பார்ப்போம்.

TYPES OF VACCINES IN RACE TO FIGHT AGAINST CORONA  TYPES OF VACCINES  VACCINES  FIGHT AGAINST CORONA  கரோனா வைரஸூக்கு எதிரான தடுப்பூசி வகைகள்  வைரஸூக்கு எதிரான தடுப்பூசி வகைகள்  தடுப்பூசி  கரோனா வைரஸை எதிர்த்து போராடும் தடுப்பூசி வகைகள்
TYPES OF VACCINES IN RACE TO FIGHT AGAINST CORONA TYPES OF VACCINES VACCINES FIGHT AGAINST CORONA கரோனா வைரஸூக்கு எதிரான தடுப்பூசி வகைகள் வைரஸூக்கு எதிரான தடுப்பூசி வகைகள் தடுப்பூசி கரோனா வைரஸை எதிர்த்து போராடும் தடுப்பூசி வகைகள்

தடுப்பூசி உருவாக்கும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு அணுகுமுறைகளை பின்பற்றுகிறார்கள். அவைகள், வீரியம் இல்லாத தடுப்பூசிகள், நேரடி தடுப்பூசிகள் மற்றும் மரபணு (டி.என்.ஏ) தடுப்பூசிகள் ஆகும். இவைகளுக்கு இடையிலான வித்தியாசம் என்ன? கடைசியாக இது எத்தனை படிநிலைகளை தாண்டி, எப்போது தயாராகிறது.? மூன்று வகையான தடுப்பூசிகளின் மீது ஏன் முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது? இந்த தடுப்பூசிகளுக்கு இடையேயான வித்தியாசம் என்ன? என்பதைப் பார்ப்போம்.

  • நேரடி தடுப்பூசிகள்:
    நன்கு அறியப்பட்ட ஒரு வைரஸ், ஆனால் பாதிப்பில்லாதது என்பதுதான் நேரடி தடுப்பூசிக்கான தொடக்கப்புள்ளி. இந்த வைரஸ் நோயை ஏற்படுத்தாது. ஆனால் இதனால் நம் உடலின் உயிரணுக்களுக்குள் பெருக்க முடிகிறது. இந்த தடுப்பூசிகள் நோய் எதிர்ப்பை தூண்டக்கூடிய ஒன்றாக உள்ளது.
  • வீரியமற்ற தடுப்பூசிகள்
    இந்த தடுப்பூசிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட வைரஸ் புரதங்கள் அல்லது வீரியமற்ற வைரஸ்கள் உள்ளன. கொல்லப்பட்ட நோய்க்கிருமிகள் உள்ளன.
    இறந்த வைரஸ்களால் இனி தன்னை பெருக்க முடியாது, ஆனால் உடல் இன்னும் அதை ஊடுருவும் ஒன்றாகவே அங்கீகரிக்கிறது. எனவே உடலின் பாதுகாப்பு அமைப்பு ஆன்டிபாடிகள் உற்பத்தி செய்யப்படுவதை உறுதி செய்கிறது. இந்த முறையானது முன்பு முயற்சித்த மற்றும் சோதிக்கப்பட்ட தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. ஏற்கனவே இன்ஃப்ளூயன்ஸா, போலியோ, ஹூப்பிங் இருமல், ஹெபடைடிஸ் பி மற்றும் டெட்டனஸ் போன்ற நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகளில் இது பயன்படுத்தப்படுகிறது.
  • மரபணு அடிப்படையிலான தடுப்பூசிகள்
    செயலற்ற தடுப்பூசிகளுடன் வைரஸ் புரதங்களை ஒப்பிடும்போது, மரபணு அடிப்படையிலான தடுப்பூசிகளின் நன்மை என்னவென்றால், இதனை மருந்தியலாளர்களால் விரைவில் உருவாக்க முடியும்.
    கோவிட்-19 க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டவுடன், பில்லியன் கணக்கான அளவில் தயாரித்து உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு மிகக் குறுகிய காலத்தில் கிடைக்கச் செய்ய வேண்டியிருக்கும் என்பதால் இதைச் செய்ய முடியும். மரபணு அடிப்படையிலான தடுப்பூசிகளில் கரோனா வைரஸ் டி.என்.ஏ அல்லது எம்.ஆர்.என்.ஏ வடிவத்தில் தூய மரபணு தகவல்களை கொண்டிருக்கின்றன.

நோய்க் கிருமியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட மரபணு பகுதியின் தனித்தனி பாகங்கள் நானோ துகள்களாக நிரம்பி உயிரணுக்களில் செலுத்தப்படுகின்றன.
இந்த தடுப்பூசி ஒருமுறை உடலில் செலுத்தப்பட்டதும், அது நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்ற பாதிப்பற்ற வைரஸ் புரதங்களை உருவாக்க வேண்டும்.
எனினும், இதுவரை அத்தகைய தடுப்பூசிகள் எதுவும் சந்தையில் இல்லை. அவை இன்னும் வளரும் நிலையில் உள்ளன. பல்வேறு வணிக நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள் இதுகுறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றன. ஜெர்மனியில் முதலாம் கட்ட ஒப்புதல் பெற்ற முதல் தடுப்பூசி எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசி ஆகும்.

கரோனா தடுப்பூசி தகவல்கள்

தடுப்பூசி வகைஇது எப்படி செயல்படுகிறதுவளர்ச்சி எண்ணிக்கை
வீரியமற்ற தடுப்பூசிகள்கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட ஒருவருக்கு இது நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதோடு நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கிறது.5
பலவீனமான வைரஸ்கொரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் உயிரணுக்களைப் பாதிக்கக்கூடியது, ஆனால் அது நோயை ஏற்படுத்தாத அளவுக்கு பலவீனமடைகிறது.3
டி.என்.ஏ அடிப்படையிலானதுகொரோனா வைரஸ் ஸ்பைக் புரதத்தை உற்பத்தி செய்யும் மரபணு செல்லின் உட்கருவுக்குள் செலுத்தப்படுகிறது9
ஆர்.என்.ஏ அடிப்படையிலானகொரோனா வைரஸ் ஸ்பைக் புரதத்தை உருவாக்குவதற்கான மரபணு வழிமுறைகள் செல்களுக்கு வழங்கப்படுகின்றன16
பிரதிபலிக்காத வைரஸ் வெக்டர்ஸ்பைக் புரதத்திற்கான டி.என்.ஏ குறியீட்டை எடுத்துச் செல்ல பாதிப்பற்ற வைரஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது14

பிரதிபலிக்கும் வைரஸ் வெக்டர்

ஸ்பைக் புரதத்திற்கான டி.என்.ஏ குறியீட்டைக் கொண்டு செல்ல பலவீனமான வைரஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது11
வைரஸ் போன்ற துகள்

கொரோனா வைரஸ் போன்ற ஆனால் செல்களை பாதிக்க முடியாத மூலக்கூறுகள்

6
புரோட்டீன் சப்யூனிட்ஒரு வைரஸின் ஒரு சிறிய பகுதி மற்றும் நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டும் ஒரு மூலப்பொருள்32
Last Updated : May 21, 2020, 4:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.