ETV Bharat / state

கரோனாவால் முடங்கிப் போன ஆண்டாள் திருவிழா - பக்தர்களின்றி தேரோட்டம்

author img

By

Published : Jul 25, 2020, 11:31 AM IST

விருதுநகர்: கரோனா எதிரொலி காரணமாக ஆண்டாள் கோயில் தேரோட்டம் பக்தர்களின்றி நடைபெற்றது.

srivilliputhur
srivilliputhur

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர திருவிழா ஆடி மாதத்தில் நடப்பது வழக்கம். பத்து நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் 20ஆம் தேதி கருடசேவையும், 22ஆம் தேதி சயன சேவையும் நடைபெற்றது. தற்போது நிலவி வரும் பொதுமுடக்கத்தால் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறக்கூடிய கோயில் விழாக்கள் தடைபடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு, ஒரு சில நிபந்தனைகளுடன் கோயில் வளாகத்திலேயே பக்தர்கள் அனுமதியின்றி விழாக்கள் நடைபெறுகின்றன. கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆடிப்பூர விழா நேற்று (ஜூலை 24) 10ஆம் நாளை எட்டியுள்ளது. ஆடிதேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தேரோட்டம்

பக்தர்களின்றி பிரகாரத்தில் நடைபெற்ற தங்கத்தேரோட்டத்தில் அலுவலர்கள் மட்டுமே கலந்துகொண்டு ஆண்டாளை தரிசித்தனர்.

இதையும் படிங்க: விதியை யார் வெல்ல முடியும் - காருக்குள் விளையாடிய குழந்தைகள் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.