ETV Bharat / state

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் விழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

author img

By

Published : Sep 21, 2020, 9:57 PM IST

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை, கிளி, பரிவட்டம் உள்ளிட்டவைகள் திருப்பதி ஏழுமலையானுக்குச் சாற்றுவதற்காக திருமலை புறப்பட்டுச் சென்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் விழா
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் விழா

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இந்தக் கோயிலில் ஒவ்வொரு வருடமும் திருப்பதியில் நடைபெறும் புரட்டாசி பிரம்மோற்சவத்தின்போது, மோகினி அலங்காரத்தில் எழுந்தருளும் மலையப்பசாமி சாற்றுவது வழக்கம்.

ராமானுஜர் தொடங்கிவைத்த இந்த நடைமுறை சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றளவும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அதனடிப்படையில் திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் 5ஆம் திருநாளான கருட சேவையன்று மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி மலையப்பசாமிக்குச் சாற்றுவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலிலிருந்து மாலை, கிளி, பரிவட்டம் உள்ளிட்டவை ஆண்டாளுக்கு சாற்றப்பட்டு, அங்கிருந்து கார் மூலம் திருப்பதி புறப்பட்டுச் சென்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் விழா

முன்னதாக இன்று (செப்.21) காலை ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து செல்லும் மாலையானது நேற்று மாலை (செப்.20) முதல் கோயில் வளாகத்திலேயே வைத்து மனோரஞ்சிதம் உள்ளிட்ட அரியவகை மலர்களால் தயாரிக்கப்பட்டது.

திருப்பதிக்கு மாலை செல்லும் இந்த விழாவில் திருக்கோயில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோ உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்ற வேளாங்கண்ணி ஆலயத் திருவிழா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.