ETV Bharat / state

மின்வெட்டு குறித்து பேசினால் மிரட்டுவதா?-அமைச்சருக்கு எச்சரிக்கை

author img

By

Published : May 10, 2022, 7:11 PM IST

மின்வெட்டு பிரச்சனை குறித்து பேசினால் வழக்கு பதியப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி மிரட்டுவது ஜனநாயகமா என்று பாஜக சிறுபான்மை அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கேள்வி எழுப்பியுள்ளார்

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

விருதுநகர்: விருதுநகரில் பாஜக கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டுரங்கன் தலைமையில் அக்கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவின் ஓராண்டு ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.

திமுகவையும் மின்வெட்டையும் பிரிக்க முடியாது: திமுகவையும் மின்வெட்டையும் பிரிக்க முடியாது என கூறிய அவர் , மின்வெட்டு பிரச்சனையினால் மாணவர்கள் முதல் தொழிற்சாலைகள் வரை பெரும் பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாகவும் , இதை பற்றி பேசினால் வழக்கு போடப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஜனநாயகமா என கேள்வி எழுப்பினார்.

திமுகவினருக்கும் இறை நம்பிக்கை கொண்டவர்களுக்கும் போர்: தமிழ்நாட்டில் தற்போது திமுகவிற்கும் இறைநம்பிக்கை உள்ளவர்களுக்கும் போர் நடைபெற்று வருவதாக கூறிய வேலூர் இப்ராஹிம் இந்து மதத்தினர் மீது தொடர்ந்து தங்களுடைய இறை நம்பிக்கையற்ற நிலைபாட்டை திமுக திணிக்க நினைத்தால் அதற்கு பெயர் திராவிட மாடல் அல்ல திருட்டு மாடல் , தீய மாடல் என விமர்சனம் செய்தார்.

வேலூர் இப்ராஹிம்

ஆங்கில மொழி என்பது அடிமை மொழி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து மருத்துவர்கள் பணிபுரிகிறார்கள் என்பதால் அங்கு இந்தி பேசுகிறார்கள்,இதை விவாதப் பொருளாக திமுக மாற்ற முயற்சிக்கிறது எனவும் ஆங்கில மொழியை அடிமை மொழியாக கருதுவதாகவும் கூறினார்


இதையும் படிங்க: 'அறிவிக்கப்பட்ட மின்வெட்டைப் பற்றிகூட தெரியாமல் அவதூறு பரப்புகிறார்' - ஈபிஎஸ்ஸுக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.