ETV Bharat / state

காங்கிரஸ், திமுக தேர்தல் அறிக்கைகள் மடத்தனமானது - ராஜேந்திர பாலாஜி!

author img

By

Published : Apr 15, 2019, 5:14 PM IST

விருதுநகர்: காங்கிரசின் தேர்தல் அறிக்கை சிறுபிள்ளைத்தனமானது என்றும் திமுகவின் தேர்தல் அறிக்கை மடத்தனமானது எனவும் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ், திமுக தேர்தல் அறிக்கைகள் மடத்தனமானது -ராஜேந்திர பாலாஜி!

விருதுநகர் மாவட்டம் அதிமுக கூட்டணி மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், அம்மாவையும் சின்னம்மாவையும் சிறைக்கு அனுப்பிவிட்டு கட்சியை கையகப்படுத்த டிடிவி தினகரன் எண்ணியதால்தான், தினகரனை கட்சியை விட்டு அம்மா வெளியே அனுப்பினார். அதனால் தான் சசிகலாவை சிறையிலிருந்து இன்றளவும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டினார்.

மேலும், காங்கிரசின் தேர்தல் அறிக்கை சிறுபிள்ளைத்தனமாகவும், திமுகவின் தேர்தல் அறிக்கை மடத்தனமாமாக உள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.

Intro:விருதுநகர்
15-04-19

காங்கிரசின் தேர்தல் அறிக்கை சிறுபிள்ளைத்தனமானது திமுகவின் தேர்தல் அறிக்கை மடத்தனமானது - பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசம்


Body:விருதுநகர் மாவட்டம் அதிமுக கூட்டணி தேமுதிக பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது செய்தியாளர்களை சந்தித்தார். அதில் கூறியதாவது வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் வாக்குப் பதிவின் மூலம் பொதுமக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் எந்தக் கட்சிக்கு தொண்டர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதை காட்டுவார்கள் என்றும் தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படுகிறது என்றும் தேர்தல் ஆணையம் அனைத்து கட்சி வேட்பாளர்களின் சோதனை செய்கிறது சரியான ஆவணங்கள் இருந்தால் எடுத்துச் செல்ல அனுமதிக்கிறது இல்லை என்றால் பறிமுதல் செய்து விடுகிறது எனவே தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறிய குற்றச்சாட்டு பொய்யானது என்றார். தொடர்ந்து பேசியவர் 8 வழி சாலை திட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு எடப்பாடி தெளிவான முடிவு எடுப்பார் அவரை மீறி தமிழகத்தில் எதுவும் நடக்காது என்றும் அம்மாவையும் சின்னம்மாவையும் சிறைக்கு அனுப்பிவிட்டு கட்சியை கையகப்படுத்த டிடிவி தினகரன் எண்ணியதால் தான் தினகரனை கட்சியை விட்டு வெளியே அனுப்பினார் அம்மா. மேலும் திமுக தலைவர் ஸ்டாலினுடைய போக்கு மூர்க்கத்தனமான போக்காக உள்ளது என்றும் காங்கிரசின் தேர்தல் அறிக்கை சிறுபிள்ளைத்தனமாக உள்ளது என்றும் திமுகவின் தேர்தல் அறிக்கை மடத்தனமானது என்றும் கூறினார். மேலும் சிறையிலிருக்கும் சசிகலாவை வெளியே எடுப்பதற்கு எந்த ஒரு முயற்சியும் தினகரன் எடுக்கவில்லை மறு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்யவில்லை தினகரனை பொருத்தவரை ஏதாவது ஒரு கட்சிக்கு தலைவராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளார் சசிகலாவை வெளியே எடுக்க எந்த முயற்சியும் செய்யாமல் இருக்கிறார் தினகரன் மக்களை ஏமாற்றுகிறார் கட்சிக்காரர்களையும் ஏமாற்றுகிறார். தினகரனின் தவறுகள் தண்டவாளம் ஏற்றப்படும் அவருடைய அரசியல் அத்தியாயம் அன்றோடு முடிவுபெறும் என்றார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.