ETV Bharat / state

இடிந்து விழும் நிலையில் அரசு மேல்நிலை பள்ளி கட்டிடம்!

author img

By

Published : Jun 8, 2019, 5:13 PM IST

விருதுநகர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே கூமாபட்டியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலை பள்ளியில் இடிந்து விழும் நிலையில் உள்ள ஆய்வக கட்டிடத்தை சீரமைக்கமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டி பகுதியில் அரசு மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களை சார்ந்த சுமார் 900 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் உள்ள ஆய்வக கட்டிடம் மிகவும் சேதம் அடைந்து மோசமான நிலையில் உள்ளது. எந்த சமயத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த ஆய்வக கட்டிடத்திற்குள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அச்சத்துடனேயே உள்ளே செல்ல வேண்டிய நிலையுள்ளது. ஆனால் பள்ளி நிா்வாகம் இந்த விசயத்தில் அலட்சிய போக்காகவே இருந்து வருகிறது.

இடிந்து விழும் நிலையில் அரசு மேல்நிலை பள்ளி கட்டிடம்

விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்து சில நாட்களாகியும் பள்ளி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருக்கிறது. இந்த ஆய்வக கட்டிடத்தை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர்
07-06-19

அரசு மேல்நிலை பள்ளியில் இடிந்து விழும் நிலையில் உள்ள ஆய்வக கட்டிடம்

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே கூமாபட்டி அரசு மேல்நிலை பள்ளியில் இடிந்து விழும் நிலையில் ஆய்வக கட்டிடத்தை சீரமைக்க பொதுமக்கள்  கோரிக்கை...

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டி பகுதியில்  அரசு மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களை சார்ந்த சுமார் 900 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் நிலையில்  இந்த பள்ளியில் ஆய்வக கட்டிடம் மிகவும் சேதம் அடைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த ஆய்வக கட்டிடத்திற்குள் மாணவர்கள்  மற்றும் ஆசிரியர்கள் அச்சத்துடனேயே செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும் பள்ளிகள் திறந்து சில நாட்களே ஆன நிலையில் உடனே ஆய்வக கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் எனபொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

TN_VNR_1_7_GOV_SCHOOL_BUILDING_VISUAL_7204885

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.