ETV Bharat / state

விருதுநகரில் நூதன முறையில் 5 சவரன் தங்க நகை கொள்ளை!

author img

By

Published : Oct 11, 2020, 4:37 PM IST

விருதுநகர்: இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் கொடுப்பது போல பெண்ணிடம் ஐந்து சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

gold jewellery robbery in Virudhunagar
gold jewellery robbery in Virudhunagar

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வி.நாங்கூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகை செல்வி என்பவர், மளிகை பொருள்கள் வாங்குவதற்கு நாங்கூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரிடம் லிஃப்ட் கேட்டு சென்றார்.

இதனிடையே, வி.நாங்கூர் பிரிவு அருகே வந்தபோது, ஓட்டுநர் வண்டியை நிறுத்திவிட்டு கார்த்திகை செல்வியிடம் கழுத்தில் அணிந்திருந்த நகையை கொடு, இல்லையென்றால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த கார்த்திகை செல்வி, தான் அணிந்திருந்த 5 சவரன் தங்க சங்கிலியை கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக கார்த்திகை செல்வி அளித்த புகாரின் அடிப்படையில், காரியாபட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், கொள்ளையில் ஈடுபட்டது 40 வயது மதிக்கத்தக்கவர் என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.