ETV Bharat / state

fireworks accident: சிவகாசி பட்டாசு விபத்து – 3 தனிப்படை அமைப்பு

author img

By

Published : Jan 3, 2022, 5:28 PM IST

fireworks accident: பட்டாசு ஆலை விபத்து 4 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளரை 3 தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தனிப்படை அமைப்பு
தனிப்படை அமைப்பு

விருதுநகர் : fireworks accident: சிவகாசி அருகே களத்தூரில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 தொழிலாளர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து ஆலை உரிமையாளர் வழிவிடு முருகன் மீது அஜாக்கரத்தையாக செயல்பட்டு மரணம் ஏற்படுத்தியது, தடை செய்யப்பட்ட ரசாயன மூலப்பொருட்களைப் பயன்படுத்தியது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆலையில் விதிமுறைகளை மீறி பட்டாசு உற்பத்தி செய்து விபத்தை ஏற்படுத்தியதாக ஆலையின் உரிமத்தை ரத்து செய்து, ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர் வழிவிடு முருகனை 3 தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: விராத் கோலி விலகல், பும்ரா துணை கேப்டன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.