ETV Bharat / state

கண் துடைப்பிற்காக மத்திய குழு ஆய்வு செய்கிறது : விவசாயிகள் சாடல்!

author img

By

Published : Feb 4, 2021, 8:45 PM IST

விருதுநகர்: தொடர் மழையால் பயிர்கள் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு செய்யாமல், ஒரு இடத்தில் மட்டும் கண் துடைப்பிற்காக ஆய்வு செய்து விட்டு சென்றதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மத்திய குழு  Farmers say the central committee did not inspect  central committee did not inspect  central team  மத்திய குழு ஆய்வு செய்யவில்லை விவசாயிகள்  விருதுநகரில் மத்திய குழு ஆய்வு செய்யவில்லை  விருதுநகர் மத்திய குழு ஆய்வு  Virudhunagar Central Team Inspection  Farmers say the central committee did not inspect in virudhunagar
Farmers say the central committee did not inspect

தமிழ்நாட்டில், கடந்த மாதம் பெய்த தொடர் மழை காரணமாக விவசாய பயிர்கள் கடுமையான சேதமடைந்தன. அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி, அருப்புக்கோட்டை, திருச்சுழி, வத்ராயிருப்பு ஆகிய பகுதிகளில் மழை நீரில் பயிர்கள் மூழ்கி சேதமடைந்தன.

பயிர் பாதிப்புகள் குறித்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணையர் ஜெகநாதன் தலைமையில், டெல்லி உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலர் அசுதோஷ் அக்னி கோத்ரி, ஹைதராபாத்தில் உள்ள மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் கீழ் இயங்கும் எண்ணெய்வித்து வளர்ச்சி இயக்குநர் மனோகரன் ஆகியோர் இன்று(பிப்.4) விருதுநகரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, அருப்புக்கோட்டை அருகேயுள்ள செங்குளம், கீழ்குடி, மறவர்பெருங்குடி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களையும் பயிர்களையும் மத்திய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் எம்.ரெட்டியாபட்டி வேளாண்மை வட்டத்தில் பயிர் சேதம் குறித்த ஆய்வை முடித்துவிட்டு, தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது மறவர்பெருங்குடியில் மத்திய குழுவினர் வந்த வாகனத்தை கிராம மக்கள் தடுத்த நிறுத்தி மனு அளிக்க முயன்றனர். ஆனால், மத்திய குழுவினர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றனர்.

மத்திய குழு ஆய்வு

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், "வி.நாங்கூர், துலுக்கன்குளம், அள்ளிக்குளம், அலபேரி, கீழ்குடி, கல்யாண சுந்தரபுரம், பரளச்சி உள்ளிட்ட பகுதிகளில் நெல், சிறுதானிய பயிர்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துப் பயிர்கள் சேதம் குறித்தும் வெங்காயம், மிளகாய், மல்லி பாதிப்பு குறித்தும் மத்திய குழிவினர் ஆய்வு செய்யவில்லை. மத்திய குழுவினர் கண் துடைப்பிற்காக ஒரு இடத்தில் மட்டும் ஆய்வு செய்துவிட்டு உண்மையாக பாதிக்கப்பட்ட விவசாயிகளை கண்டுகொள்ளாமல் சென்று விட்டனர். தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்" எனக் கோரிக்கை வைத்தனர்.

மத்திய குழு ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் கண்ணன், வருவாய் அலுவலர் மங்களராம சுப்பிரமணியன், வேளாண் இணை இயக்குநர் உத்தண்ட ராமன், வேளாண்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழு ஆய்வு செய்யவில்லை - விவசாயிகள் குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.