ETV Bharat / state

ஆண்டாள் கோயில் ஆடிப்பூர மண்டப சுவர் இடிப்பு - கோயில் நிர்வாகம் எதிர்ப்பு

author img

By

Published : Aug 20, 2020, 4:05 AM IST

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அருகே வானமாமலை ஜீயர் மடத்திற்குட்பட்ட தங்கும் விடுதி கட்டட சுவரை இடிப்பதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

andal temple
andal temple

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் முகப்பில் ஜீயர் மடத்திற்குட்பட்ட தனியாருக்குச் சொந்தமான தங்கும் மடம் உள்ளது. அந்த மடத்தை தற்போது குத்தகைக்கு எடுத்துள்ள குத்தகைதாரர்கள் தங்கும் விடுதியை வியாபார நோக்கில் மாற்றி கடையமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அதன்படி, ஆண்டாள் கோயில் அருகே அமைந்துள்ள கட்டடத்தின் கல் சுவற்றை பிரேக்கர் மூலம் நேற்று (ஆகஸ்ட் 19) இடித்துள்ளனர். இதைக் கண்ட ஆண்டாள் கோயில் நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது. கோயில் நிர்வாகத்தின் எதிர்ப்பையும் மீறி சுவர் இடிக்கப்பட்டது.

முன்னதாக, ஆண்டாள் கோயில் மற்றும் திருமலை நாயக்கர் மஹால் அமைந்துள்ள பகுதி அருகேயுள்ள கட்டடங்களை இடிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆடிப்பூர கொட்டகை சுவர் இடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: நண்பனின் நினைவு தினத்தில், தூய்மைப் பணியாளர்களைக் கவுரவப்படுத்திய நண்பர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.