ETV Bharat / state

முதலமைச்சரை அவதூறாக விமர்சித்த முதியவர் கைது

author img

By

Published : Jun 21, 2022, 10:43 AM IST

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை சமூக வலைதளங்களில் விமர்சித்த சிவகாசியை சேர்ந்த முதியவரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர்.

முதலமைச்சரை அவதூறாக விமர்சித்த முதியவர் கைது
முதலமைச்சரை அவதூறாக விமர்சித்த முதியவர் கைது

சிவகாசி அருகே திருத்தங்கள் பகுதியைச் சேர்ந்த நாகராஜ்(65) என்ற முதியவர் தமிழ்நாடு முதலமைச்சர் குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் திமுக விருதுநகர் தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் திருத்தங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட சைபர்கிரைம் காவல்துறையினர் முதியவரின் சமூக வலைதளங்கள் அனைத்திலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினை இழிவுபடுத்தும் விதமாக பதிவிட்டது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து முதலமைச்சரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதற்காக முதியவர் நாகராஜை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 2 நாட்களுக்கு முன்பு ஓபிஎஸ் ஆதரவு.. இன்று ஈபிஎஸ் ஆதரவு - நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட விருதுநகர் மா.செ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.