ETV Bharat / state

மருந்தக உரிமையாளரை கத்தியால் தாக்கி பணம், செல்போன் கொள்ளை - சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

author img

By

Published : Jul 20, 2020, 12:47 PM IST

விருதுநகர்: மருந்தக உரிமையாளரை கத்தியால் தாக்கிவிட்டு ரூ.5000 பணம் மற்றும் செல்போனை கொள்ளையடித்த நபரை, சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் தேடிவருகின்றனர்.

camera
camera

விருதுநகர் கீழ கடைத் தெருவில் மருந்தகம் நடத்திவருபவர் ரமேஷ் (62). இவர் நேற்று முன்தினம் (ஜூலை 18) பிற்பகல் 3 மணி அளவில் மருந்தகத்தை பூட்டும் நேரத்தில், நோட்புக் வேண்டும் என்று ஒரு நபர் கேட்டுள்ளார்.

அதற்காக மீண்டும் கடையைத் திறக்கும்போது, பின்னால் இருந்த நபர் அவரது தலையில் கத்தியால் வெட்டிவிட்டு, அவர் கையிலிருந்த ஐயாயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்றார்.

சிசிடிவி காட்சிகள்

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசார், அப்பகுதியில் உள்ள கடைகளிலிருந்த சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்தனர். அப்போது கடைக்காரரை தாக்கிவிட்டு, கையில் கத்தியுடன் ஒருவர் ஓடிவரும் காட்சி பதிவாகி உள்ளது தெரியவந்தது. இந்த வீடியோ பதிவுகளைக் கொண்டு குற்றவாளியை போலீசார் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:கடையில் வைத்திருந்த கல்லாப்பெட்டி திருட்டு: சிசிடிவி பதிவுகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.