ETV Bharat / state

'அதிமுக அரசில் பாஜக அங்கம் வகிக்கும்' - வி.கே. சிங் திட்டவட்டம்

author img

By

Published : Mar 30, 2021, 5:46 PM IST

Updated : Mar 30, 2021, 7:05 PM IST

விருதுநகர்: அடுத்து அமையப்போகும் அதிமுக அரசில் பாஜக நிச்சயம் அங்கம் வகிக்கும் என பாஜகவின் தமிழ்நாடு தேர்தல் இணைப் பொறுப்பாளர் வி.கே. சிங் கூறியுள்ளார்.

singh
singh

விருதுநகரில் உள்ள பாஜக தேர்தல் அலுவலகத்தில் இன்று பாஜகவின் தமிழ்நாடு தேர்தல் இணைப் பொறுப்பாளரும், மத்திய இணையமைச்சருமான வி.கே. சிங் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “பொதுமக்களை மனத்தில் வைத்து எப்படி எம்ஜிஆர் ஆட்சி நடத்தினாரோ, அதேபோல் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் ஏழைகள், உழவர்கள், பெண்கள் என அனைவரையும் மனத்தில் வைத்து ஆட்சி நடத்தும். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் திரும்பப் பெறப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படும்.

வாஜ்பாய் இருந்தபோது திமுகவுடன் கூட்டணி அமைத்தது என்பது பாஜக செய்த மிகப்பெரிய தவறு. திமுக தலைவர் ஸ்டாலின் தோல்வி பயத்தால்தான், அதிமுக பாஜக கூட்டணியைப் பற்றி தவறாகப் பேசிவருகிறார்.

குடும்ப அரசியலைப் பின்பற்றும் கட்சிகளைவிட, ஜனநாயக முறைகளைப் பின்பற்றும் கட்சிகள்தான் மக்களுக்கு நன்மை செய்யும். அந்த வகையில் அடுத்து அதிமுக அமைக்கும் அரசில் பாஜகவும் அங்கம் வகிக்கும்” எனத் தெரிவித்தார்.

அதிமுக அரசில் பாஜக அங்கம் வகிக்கும்! - வி.கே.சிங்

இதையும் படிங்க: ’எடப்பாடி பழனிசாமி சிறைக்கு செல்வது உறுதி' - உதயநிதி

Last Updated : Mar 30, 2021, 7:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.