ETV Bharat / state

தடுப்புச்சுவரில் இருச்சக்கர வாகனம் மோதி தந்தை மகன் பலி!

author img

By

Published : Oct 5, 2019, 10:22 AM IST

விழுப்புரம்: மரக்காணம் அருகே சாலையோரம் இருந்த தடுப்புச்சுவரில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தந்தை மற்றும் மகன் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர்

தடுப்புச்சுவரில் இருச்சக்கர வாகனம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கந்தாடு பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி. இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரது மகன் விஜயகுமார், தந்தையை இருச்சக்கர வாகனத்தில் மரக்காணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

தடுப்புச்சுவரில் இருச்சக்கர வாகனம்

சிகிச்சை முடிந்து மரக்கணம் - திண்டிவனம் சாலை வழியாக வீடு திரும்பி கொண்டிருந்த போது திடீரென சாலையோரம் உள்ள தடுப்பு கம்பியில் மோதி இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது.

இதில் மாசிலாமணி மற்றும் அவரது மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரழ்ந்தனர். தகவல் அறிந்து வந்த மரக்காணம் காவல்துறையினர் விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு புதுவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விழுப்புரம்
மாசிலாமணி மற்றும் அவரது மகன் விஜயகுமார்

மேலும் இந்த விபத்துக்குறித்து வழக்குபதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: தீபாவளி சிறப்பு பேருந்து வசதி - வெளியூர் பயணிகள் உற்சாகம்!

Intro:விழுப்புரம்: மரக்காணம் அருகே சாலையோரம் இருந்த தடுப்புச்சுவரில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தந்தை மகன் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர்.Body:விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கந்தாடு பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி (75).

இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரது மகன் விஜயகுமார், தந்தையை இருச்சக்கர வாகனத்தில் மரக்காணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் சிகிச்சை முடிந்து மரக்கணம் - திண்டிவனம் சாலை வழியாக வீடு திரும்பி கொண்டிருந்த போது திடீரென சாலையோரம் உள்ள தடுப்பு கம்பியில் மோதி இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது.

இதில் மாசிலாமணி மற்றும் விஜயகுமார் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரழ்ந்தனர்.

தகவல் அறிந்து வந்த மரக்காணம் காவல்துறையினர் விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு புதுவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்துக்குறித்து வழக்குபதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Conclusion:சிகிச்சைக்காக மருத்துவமணைக்கு சென்ற தந்தை மகன் விபத்தில் உயிரழந்த சம்பவம் அந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(இந்த செய்திக்கான புகைப்படம் மற்றும் வீடியோ மெயிலில் உள்ளது).
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.