ETV Bharat / state

சுவர் விளம்பர விவகாரம்: திமுக - அதிமுகவினர் இடையே மோதல்

author img

By

Published : Jan 19, 2020, 8:32 AM IST

விழுப்புரம்: சுவர் விளம்பரம் செய்வது தொடர்பாக நகர திமுக, அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நகர திமுக-அதிமுகவினர் இடையே மோதல்
நகர திமுக-அதிமுகவினர் இடையே மோதல்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவச் சிலை திறப்பு விழா விழுப்புரத்தில் ஜன.20ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு கருணாநிதியின் சிலையை திறந்துவைக்க உள்ளார். அதைத் தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரை ஆற்றவுள்ளார்.

இதற்காக திமுகவினர் விழுப்புரம் நகரப் பகுதிகளில் சுவர் விளம்பரங்களை வரைவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதற்கிடையே விழுப்புரம் ரயில் நிலைய மேம்பால சுவரில் அதிமுகவினர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் வாழ்த்து விளம்பரங்கள் இருந்துள்ளன.

நகர திமுக-அதிமுகவினர் இடையே மோதல்

அதில் திமுகவினர் நேற்று விளம்பர பேனர்களை ஒட்டியுள்ளனர். பின்னர், சிறிது நேரம் கழித்து அங்கு வந்த அதிமுகவினர், திமுகவினரின் பேனர்களை அகற்றியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திமுகவினர், அதிமுகவினர் செயலைக் கண்டித்து சாலை மறியல் போராட்டம் செய்ய திட்டமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இருதரப்பு நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. தற்போது, இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்படாமல் இருக்க சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ள இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மெரினாவில் உதவி ஆணையரிடம் வாக்குவாதம் செய்த அதிமுக பிரமுகர்

Intro:விழுப்புரம்: சுவர் விளம்பரம் செய்வது தொடர்பாக விழுப்புரம் நகர திமுக-அதிமுகவினர் இடையே மோதல் உருவானது.
Body:மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவ சிலை திறப்பு விழா விழுப்புரத்தில் வருகிற 20ம் தேதி நடைபெற உள்ளது.

இதில் அக்கட்சியின் தற்போதைய தலைவர் மு. க. ஸ்டாலின் கலந்து கொண்டு கலைஞர் கருணாநிதியின் சிலையை திறந்து வைக்க உள்ளார். அதை தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரை ஆற்றவுள்ளார்.

இதற்காக திமுகவினர் விழுப்புரம் நகர பகுதிகளில் சுவர் விளம்பரங்களை செய்து வருகின்றனர்.

இதற்கிடையே விழுப்புரம் ரயில் நிலைய மேம்பால சுவற்றில் ஏற்கனவே அதிமுகவினர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் வாழ்த்து சுவர் விளம்பரங்களை செய்து இருந்தனர்.

இதில் திமுகவினர் இன்று விளம்பர பேனர்களை ஒட்டியுள்ளனர்.

பின்னர் சிறிது நேரம் கழித்து அங்கு வந்த அதிமுகவினர், திமுகவினரின் பேனர்களை அகற்றியுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திமுகவினர், அதிமுகவினர் செயலை கண்டித்து சாலை மறியல் போராட்டம் செய்ய திட்டமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இருதரப்பு நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Conclusion:தொடர்ந்து மோதல் ஏற்படாமல் இருக்க சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ள இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

(இந்த செய்திக்கான விடியோ மற்றும் புகைப்படம் வாட்ஸ்-ஆப்பில் உள்ளது)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.