ETV Bharat / state

உரிய ஆவணங்கள் இல்லாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 165 டன் உரங்கள் பறிமுதல்!

author img

By

Published : May 18, 2022, 10:47 PM IST

விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் உர பதுக்கல் தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடைபெறுகிறது. அதன்படி இன்று(மே 18) 165 டன் உரம் உரிய ஆவணங்கள் இல்லாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்யப்பட்ட உர மூட்டைகளை மாவட்ட ஆட்சியர் மோகன் ஆய்வு செய்தார்.

உரிய ஆவணங்கள் இல்லாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 165 டன் உரங்கள் பறிமுதல்
உரிய ஆவணங்கள் இல்லாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 165 டன் உரங்கள் பறிமுதல்

விழுப்புரம்: கடந்த ஒரு வார காலமாக பல்வேறு உரக் கிடங்குகளில் மாவட்ட ஆட்சியர் மோகன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் விக்கிரவாண்டி பகுதியில் உள்ள நான்கு நிறுவனங்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 டன் யூரியா 65 டன் கலப்பு உரங்களை வேளாண்மைத்துறை பறிமுதல் செய்துள்ளது. அவற்றை மாவட்ட ஆட்சியர் மோகன் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வேளாண் இணை இயக்குநர், ‘தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் கலப்பு உரங்கள் மற்றும் யூரியா போன்றவை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டோம். ஆய்வில் விக்கிரவாண்டி பகுதியில் 4 நிறுவனங்களில் உரிய ஆவணங்கள் இன்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்த கலப்பு உரங்கள், யூரியா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் கோலியனூர் பகுதியில் 19 டன் உரிய ஆவணம் இன்றி கலப்பட உரங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஆய்வு மேற்கொள்கிறோம். அத்துடன் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என வேளாண் இணை இயக்குநர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வேலூரில் சிக்கன் ஷவர்மா கடைகளில் அதிரடி சோதனை; 9 கடைகளுக்கு நோட்டீஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.