ETV Bharat / state

அரசியல் பிரமுகரை அடித்து உதைத்த காவல் உதவி ஆய்வாளர்

author img

By

Published : Dec 5, 2019, 8:48 AM IST

கள்ளக்குறிச்சி: தொலைந்து போன தனது இருசக்கர வாகனம் குறித்து வழக்குப் பதிவு செய்யக் கோரிய அதிமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரை காவல் உதவி ஆய்வாளர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

police attack, ஊராட்சி மன்றத் தலைவரை அடித்து உதைத்த காவல் உதவி ஆய்வாளர்
police attack

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூகையூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர் அதிமுகவின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஆவார். இவரது இருசக்கர வாகனம் நவம்பர் 5ஆம் தேதி காணாமல் போனது. இதனையடுத்து அவர் கீழ்குப்பம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் சபரிமலையிடம் தனது வாகனம் காணவில்லை என புகார் மனு அளித்துள்ளார்.

இந்தப் புகாரை வாங்கிக் கொண்டு உதவி ஆய்வாளர் சபரிமலை வழக்குப்பதிவு செய்யாமல் இருந்தார் எனக்கூறப்படுகிறது. இதனிடையே கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பெரியசாமி காவல் நிலையத்திற்குச் சென்று உதவி ஆய்வாளர் சபரிமலையிடம் ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என கேள்வி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர் பெரியசாமியை அடித்து உதைத்ததோடு காவல் நிலையத்தில் வைத்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.

தாக்கப்பட்டவரின் மனைவி

இதுகுறித்து தகவலறிந்த பெரியசாமியின் உறவினர்கள் அவரை காவல் நிலையத்திலிருந்து மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெரியசாமியின் உறவினர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் இது தொடர்பாக புகார் அளித்து பெரியசாமியை தாக்கிய காவல்துறை உதவி ஆய்வாளர் சபரிமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

இச்சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெரியசாமியை கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பிரபு, அரசு மருத்துவமனையில் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரை சந்தித்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு

பின்னர் பொய் வழக்கு பதிவு செய்த கீழ்குப்பம் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரனிடம் புகார் மனுவை அளித்தார்.

Intro:tn_vpm_01_ex_president_attck_si_police_vis_tn10026.mp4Body:tn_vpm_01_ex_president_attck_si_police_vis_tn10026.mp4Conclusion:கள்ளக்குறிச்சி அருகே தொலைந்து போன வாகனத்திற்கு வழக்கு பதிவு செய்ய கோரியவருக்கு அடி உதை கொடுத்த உதவி ஆய்வாளரால் பரபரப்பு !!!


கள்ளக்குறிச்சி மாவட்டம் கூகையூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி இவரா அதிமுகவின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். இவரது இரு சக்கர ஊர்தி கடந்த நவம்பர் மாதம் 5 தேதி காணாமல் போனது இது குறித்து அவர் கீழ்குப்பம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் சபரிமலையிடம் தனது வாகனம் காணவில்லை என புகார் மனு அளித்துள்ளார். இந்த புகாரை வாங்கிக் கொண்டு உதவி ஆய்வாளர் சபரிமலை இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது. மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பு பெரியசாமி காவல் நிலையத்தில் சென்று உதவி ஆய்வாளர் சபரிமலையிடம் ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என கேள்வி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர் சபரிமலை அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமியை அடி உதை கொடுத்து காவல் நிலையத்தில் அசிங்கமாக அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது,மேலும் இது குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் பெரியசாமியை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து அவர் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்தநிலையில் பெரியசாமியின் உறவினர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்காவல்துறை உதவி ஆய்வாளர் சபரி மலை மீது நடவடிக்கை எடுக்கக் வேண்டும் என கேட்டுக் கொண்டனர். மேலும் கொடுத்த புகாருக்கு வழக்குபதிவு செய்யாமல் அதை தட்டிக் கேட்பதற்கு அடி உதை கொடுத்து உதவி ஆய்வாளரால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெரியசாமியை கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இருக்கும் நேரில் சென்று நலம் விசாரித்தார், இதனை தொடந்து பொறுப்பில்லமால் நடந்த கொண்டதற்கும், பொய் வழக்கு பதிவு செய்தமைக்கும் கீழ்குப்பம் உதவி ஆய்வாளர் சபரிமலை மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் அவர்களிடம் புகார் மனுவை அளித்தார்.

பேட்டி:
பாதிக்கப்பட்டவரின் மனைவி பச்சையம்மாள்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.