ETV Bharat / state

தமிழ்நாட்டிற்குள் இந்தியை புகுத்த திட்டம் - க.பொன்முடி குற்றச்சாட்டு!

author img

By

Published : Jul 31, 2020, 9:06 PM IST

விழுப்புரம்: புதிய கல்விக் கொள்கை மூலம் மத்திய, மாநில அரசுகள் இந்தி, சமஸ்கிருத மொழியை தமிழ்நாட்டில் புகுத்த திட்டமிடுவதாக திமுக முன்னாள் அமைச்சர் க. பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்குள் இந்தியை புகுத்த திட்டம் - க.பொன்முடி குற்றச்சாட்டு!
தமிழ்நாட்டிற்குள் இந்தியை புகுத்த திட்டம் - க.பொன்முடி குற்றச்சாட்டு!

விழுப்புரத்தில் முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சரும், கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான க. பொன்முடி ஜூம் ஆப் (Zoom App) மூலம் இன்று (ஜூலை31) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "மத்திய, மாநில அரசுகள் புதிய கல்விக் கொள்கை திட்டம் என்ற பெயரில் பாஜகவின் கொள்கைகளை செயல்படுத்தி வருகிறது. இதற்காக கரோனா வைரஸ் தொற்று காலத்தை பயன்படுத்துகின்றனர்.

புதிய கல்வி கொள்கை மூலம் மத்திய, மாநில அரசுகள் இந்தி, சமஸ்கிருத மொழியை தமிழ்நாட்டிற்குள் புகுத்த திட்டமிடுகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தால் அண்ணா கூறியதைப் போல இருமொழி கல்வி கொள்கை சட்டத்துக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முக்கியத்துவம் அளிப்பார்” எனத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டிற்குள் இந்தியை புகுத்த திட்டம் - க.பொன்முடி குற்றச்சாட்டு!

மேலும், “இந்த புதிய கல்விக் கொள்கை சட்டத்தால் கிராமப்புற மாணவர்கள் பெரிய அளவில் பாதிப்படுவார்கள், ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் நடத்துவதால் வசதிபடைத்த மாணவர்கள் மட்டுமே பயன்பெற முடியும்” எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க...சிறுமியை வன்புணர்வு செய்து கொலைசெய்த வழக்கில் இருந்து திமுக முன்னாள் எம்எல்ஏ விடுவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.