ETV Bharat / state

வள்ளலார் பெயரில் புதிய பல்கலைக்கழகம் - எம்.பி. ரவிக்குமார்

author img

By

Published : Sep 16, 2020, 6:09 PM IST

விழுப்புரம்: மாவட்டத்தில் தனியே ஒரு பல்கலைக்கழகம் அமைத்து அதற்கு வள்ளலார் பெயரை சூட்டவேண்டும் என விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கோரிக்கைவைத்துள்ளார்.

MP Ravi Kumar demanded separate university be set up in Villupuram and named  Vallalar
MP Ravi Kumar demanded separate university be set up in Villupuram and named Vallalar

இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், "விழுப்புரத்தில் மத்திய பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க வேண்டும் என நான் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினேன். கல்வியில் பின்தங்கிய விழுப்புரத்தில் மாநில அரசாவது பல்கலைக்கழகத்தை அமைக்க வேண்டும் என சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகத்திடமும் கோரிக்கைவிடுத்திருந்தேன்.

இப்போது விழுப்புரத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்படுவதாக முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். அதை நான் வரவேற்கிறேன். ஆனால் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தைப் பிரித்து அதன் கிளையாக அமைப்பது ஏற்புடையதல்ல.

மாவட்டத்தில் தனியே ஒரு பல்கலைக்கழகத்தை அமைப்பதே சிறந்தது. அந்தப் பல்கலைக்கழகத்துக்கு ‘வள்ளலார்’ பெயரைச் சூட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.