ETV Bharat / state

தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்

author img

By

Published : Aug 11, 2019, 4:05 AM IST

விழுப்புரம்: தேசிய நெடுஞ்சாலையில் நின்றுக்கொண்டிருந்த கார் தீடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

THIRUKOVILUR ROAD

கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியைச் சேர்ந்தவர் தனபால். இவர் காரில் நேற்று திருக்கோவிலூரில் இருந்து விழுப்புரம் வழியாக பண்ரூட்டிக்கு வந்துக் கொண்டிருந்தார்.

விழுப்புரம்  தீப்பிடித்து எரிந்த கார்  VILUPURAM  CAR BURNT  HIGH WAY
தீயணைப்புதுறையினர் தீயை அணைத்தனர்

விழுப்புரம்- திருக்கோவிலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாளையம் பகுதி அருகே வந்த போது, தனபால் கரை சாலையோரம் நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது அந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைப் பார்த்த அவர் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இதில் கார் முழுவதும் எரிந்து நாசமானது.

சாலையில் தீப்பிடித்து எரியும் கார்

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:விழுப்புரம் அருகே சொகுசு கார் நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Body:விழுப்புரம் - திருக்கோவிலூர் சாலையில் நன்னாடு அடுத்த பாளையம் என்ற இடத்தில் திருக்கோவிலூரில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த கார் இன்று மாலை திடீரென தீப்பற்றி எரிந்தது.

சம்பவ இடத்தில் பொதுமக்கள் தீயை அணைக்க முற்பட்டனர். ஆனாலும், கார் மளமளவென எரிந்து முற்றிலும் தீயில் கருகி எரிந்து சாம்பலானது.

இதனை அடுத்து அக்கம்பக்கத்தினர் விழுப்புரம் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்ததன் பேரில், விரைந்து வந்த விழுப்புரம் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் தாலுகா காவல் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சொகுசு கார் SWIFT TN31 BM 2381 ஆனது. திருக்கோவிலூரில் இருந்து விழுப்புரம் வழியாக பண்ருட்டிக்கு செல்லவிருப்பதாகவும், இந்த காரை ஒட்டி வந்த நபர் விழுப்புரம் - திருக்கோவிலூர் சாலையான நன்னாடு அடுத்த பாளையம் என்ற இடத்தில் நிறுத்திவிட்டு அருகிலுள்ள கடைக்கு சென்ற போது அந்த கார் தீப்பற்றி எரிந்ததாக தகவல் தெரிவிக்கின்றனர் காரின் உரிமையாளர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்த தனபால் என்பவர் சொந்தமானது என தெரியவந்துள்ளது.

மேலும் தீப்பற்றியதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Conclusion:திடீரென தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு கார் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.