ETV Bharat / state

தீபாவளி சீட்டு நடத்தியதில் பண மோசடி செய்த பெண் மீது புகார்

author img

By

Published : Jan 2, 2020, 7:43 AM IST

திருப்பத்தூர்: தீபாவளி சீட்டு நடத்தி பண மோசடி செய்த பெண் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி சீட்டு நடத்தில் பல லட்சம் மோசடி செய்த பெண் மீது புகார்!
தீபாவளி சீட்டு நடத்தில் பல லட்சம் மோசடி செய்த பெண் மீது புகார்!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த கோடியூர் சமத்சாய்பு தெருவைச் சேர்ந்த குருமூர்த்தியும், அவரது மனைவி மலரும் பல ஆண்டுகளாக தீபாவளி சீட்டு நடத்திவந்தனர்.

இந்நிலையில், இந்தாண்டு தீபாவளிக்குச் சீட்டு கட்டியவர்களுக்கு தீபாவளிக்கு பட்டாசு பாக்ஸ் தவிர பணம் கட்டியதற்கான எந்தப் பொருட்களையும் அவர்கள் வழங்கவில்லை. இதுகுறித்து பணம் கட்டியவர்கள் மலரிடம் பலமுறை கேட்டும் எந்தப் பதிலும் அளிக்கமால் அலட்சியமாக அவர் இருந்துள்ளார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் நேற்று ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் கூறுகையில், “ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த தாங்கள் மலர் நடத்திய தீபாவளி சீட்டில் மாதம் 200 ரூபாய் வீதம் 12 மாதங்கள் கட்டினோம். இதனால் 40 கிராம் வெள்ளி, 2 கிராம் தங்க காசு, பட்டாசு பாக்ஸ் ஆகியவை வழங்கப்படும். இதேபோன்று ஆயிரம் ரூபாய் கட்டினாலும் 40 கிராம் வெள்ளி, 4 கிராம் தங்க காசு, பட்டாசு பாக்ஸ் ஆகியவை வழங்கப்படும்.

தீபாவளி சீட்டு நடத்தில் பல லட்சம் மோசடி செய்த பெண் மீது புகார்

இதனை நம்பி நாங்களும் கட்டினோம். ஆனால் 12 மாதங்கள் முடிந்ததும், கடந்த தீபாவளியன்று பட்டாசு பாக்ஸ் மட்டுமே எங்களுக்கு கிடைத்தது. வெள்ளி, தங்க காசு வழங்கவில்லை” என்று கூறினார்.

இதையும் படிங்க...ஆசைவார்த்தைக் கூறி சிறுமி பாலியல் வன்கொடுமை - குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!

Intro:தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி செய்த பெண் மீது காவல்நிலையத்தில் புகார்Body:




திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் சமத்சாய்பு தெருவை சேர்ந்த குருமூர்த்தி அவரது மனைவி மலர் இவர்கள் பல ஆண்டுகளாக தீபாவளி சீட்டு நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு சீட்டு கட்டியவர்களுக்கு தீபாவளிக்கு பட்டாசு பாக்ஸ் தவிர பணம் கட்டியதற்கான எந்த பொருட்களையும் இவர் வழங்கவில்லை. இதுகுறித்து பணம் கட்டியவர்கள் மலரிடம் பலமுறை கேட்டும் எந்த பயனும் இல்லை இதுகுறித்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நேற்று ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது

ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த நாங்கள் மலர் நடத்திய தீபாவளி சீட்டில் மாதம் ரூபாய் 200 வீதம் 12 மாதங்கள் கட்டினோம். இதனால் 40 கிராம் வெள்ளி 2 கிராம் தங்கம் காசு மற்றும் பட்டாசு பாக்ஸ் வழங்கப்படும். இதே போன்ற ஆயிரம் ரூபாய் கட்டினாலும் 40 கிராம் வெள்ளி 4 கிராம் தங்கம் காசு மற்றும் பட்டாசு பாக்ஸ் வழங்கப்படும் என்று தெரிவித்தார் இதனை நம்பி நாங்கள் மலரிடம் தீபாவளி சீட்டை 400க்கும் மேற்பட்டோர் கட்டினோம்

ஆனால் 12 மாதங்கள் முடிந்ததும் கடந்த தீபாவளியன்று இவர் பட்டாசு பாக்ஸ் மட்டுமே கொடுத்தார் வெள்ளி காசு தங்க காசு வழங்கவில்லை இதுகுறித்து அவரிடம் கேட்டபோது இன்று நாளை என நாள் கடத்தி வந்தார்கள் அவரிடம் இருந்து முறையான பதில் இல்லை மேலும் 15 உறுப்பினர்கள் சேர்த்தால் ஒரு தீபாவளி சீட்டு இலவசம் என அறிவித்திருந்தார் இதனை நம்பி ஜோலார்பேட்டை சேர்ந்தவர்கள் எல்லாம் பலர் அவரிடம் ஏஜெண்ட்டாக செயல்பட்டு தங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் ஆசை வார்த்தை கூறி கட்டாயப்படுத்தி தீபாவளி சீட்டில் இணைந்துள்ளனர்

இதன்படி ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மலரிடம் தீபாவளி சீட்டு கட்டியுள்ளனர். இந்நிலையில் ஏஜென்டாக செயல்பட்டவர்கள் பலரிடம் தீபாவளி சீட்டு பணம் 12 மாதங்கள் வசூல் செய்தது மலரிடம் கட்டியுள்ளனர் இதனால் மலர் தீபாவளி சீட்டு பணம் சுமார் ரூபாய் 48 லட்சத்துக்கு மேல் மோசடி செய்துள்ளார்.

ஏஜென்டாக செயல்பட்டவர்களிடம் பணம் கட்டியவர்கள் பணம் கேட்ட எச்சரித்து வருகின்றனர் இதனால் விரக்தியடைந்த நாங்கள் ஜோலார்பேட்டை போலீஸில் மலர்மீது புகார் அளித்துள்ளோம் அதேபோன்று எஸ்பி மற்றும் கலெக்டருக்கு புகார் மனு அளித்துள்ளோம். தற்போது மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் அவரிடம் 30க்கும் மேற்பட்டவர்கள் மனுக்கள் கொடுத்திருக்கிறோம். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். ஜோலார்பேட்டை பகுதியில் 48 லட்சம் மோசடி செய்த பெண் மீது புகார் அளித்ததால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது....Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.