ETV Bharat / state

வேலூர் தொகுதியில்  தோல்வி: அப்செட்டில் ஏ.சி.சண்முகம்... !

author img

By

Published : Aug 12, 2019, 6:18 PM IST

வேலூர்: மக்களவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவியதால் ஏ.சி சண்முகம் கடும் விரக்தியில் உள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

a c shanmugam

தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் 5ஆம் தேதி வெளியானது. இதில் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகனும், திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை விட 8141 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். அதேசமயம் அதிமுக தரப்பில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அனைத்து துறை அமைச்சர்களும் பரப்புரை மேற்கொண்டும் அதிமுக வேட்பாளர் வெற்றிப் பெறாததால் தொண்டர்கள் அனைவரும் களையிழந்து காணப்படுகின்றனர்.

இந்நிலையில் தேர்தல் முடிவு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில்," இதுவும் எங்களுக்கு வெற்றி தான் என தெரிவித்தார். ஆனால் தற்போது வரை அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் தேர்தல் முடிவு குறித்து வாய் திறக்காதது அவரது விரக்தியை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

a c shanmugam upset
ஏ.சி.சண்முகம் -1

அதாவது எண்ணிக்கையின் போது முதல் ஆறு சுற்றுகளில் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை வகித்து வந்தார். இதனால் மகிழ்ச்சியில் திளைத்த அவர், வாக்கு எண்ணும் மையம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி இருந்தபடி நிலவரத்தை உடனுக்குடன் கேட்டு தெரிந்து கொண்டிருந்தார்.

ஆனால் நேரம் செல்ல செல்ல அடுத்தடுத்த சுற்றுகளில் திமுக முன்னணி பெற்றதால் ஏ.சிசண்முகம் சோகத்தில் மூழ்கினார். ஒரு கட்டத்தில் இனி நம்மால் வெற்றி பெற முடியாது என்பதை அறிந்த ஏசி.சண்முகம் அங்கிருந்து நடையைக் கட்டினார். பின்னர் நேராக சென்னைக்கு சென்றதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் அரசியல் கட்சி தலைவர்களை பொறுத்தவரை வெற்றினாலும் தோல்வினாலும் அதை ஏற்றுக்கொண்டு தங்களுக்குரிய மனநிலையில் கருத்துத் தெரிவிப்பார்கள். ஆனால் தேர்தல் முடிவு வெளியாகி இதுவரை ஏ.சி சண்முகம் வாய் திறக்காமல் உள்ளார்.

a c shanmugam upset
ஏ.சி.சண்முகம்-2

ஏசி.சண்முகத்தைப் பொருத்தவரை இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறலாம் என 100 விழுக்காடு மனதில் நம்பிக்கை வைத்திருந்தார். இதற்கு காரணம் ஏற்கனவே இவர் இதே வேலூர் தொகுதியில் எம்ஜிஆர் இருந்தபோது 1984ல் அதிமுக சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுமட்டுமில்லாமல் 2014ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் திமுக, அதிமுக கட்சியோடு கூட்டணி அமைக்காமல் தேசிய கட்சியான பாஜக உடன் கூட்டணி அமைத்து புதிய நீதிக்கட்சி சார்பில் வேலூர் மக்களவைத் தொகுதியில் ஏ.சி சண்முகம் மீண்டும் போட்டியிட்டார்.

அப்போது தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செங்குட்டுவனை விட வெறும் முப்பதாயிரம் வாக்குகள் மட்டுமே குறைவாகப் பெற்று தோல்வி அடைந்தார். இந்த சுறுசுறுப்புடன் தற்போது நடைபெற்ற தேர்தலில் அதிமுக, பாமக தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணியில் இருப்பதாலும் அவர் சார்ந்த முதலியார் சமூகத்தினர் வேலூர் தொகுதியில் அதிகம் வசிப்பதாலும் நிச்சயம் வெற்றி நமக்குத்தான் என்ற நம்பிக்கையுடன் இருந்து வந்தார்.

a c shanmugam upset
ஏ.சி.சண்முகம்-3

தேர்தல் பரப்புரையில் பேசும் போதுகூட மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று கூறியிருந்தார். அதேபோல் ஏ.சி. சண்முகத்துக்கு ஆதரவாக பரப்புரைச் செய்த முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களும் வேலூரில் நிச்சயம் வெல்லப்போவது ஏ.சி சண்முகம் தான் என்று பேசி வந்தனர்.

அதேபோல் மக்களைக் கவர்வதற்காக வேலூரில் ஆறு சட்டமன்ற தொகுதிகளில் இரண்டு கோடி மதிப்பில் தலா ஒரு திருமண மண்டபம் கட்டி தருவேன், எனது மருத்துவக் கல்லூரியில் ஏழை மாணவர்களுக்கு இலவச சீட் கொடுப்பேன், எனது மருத்துவமனை சார்பில் தொகுதி முழுவதும் அவ்வப்போது இலவச மருத்துவ முகாம் நடத்துவேன் என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதேசமயம் திமுகவைப் பொறுத்தவரை வழக்கம்போல் பொதுவான பிரச்னையான, பாலாறு பிரச்னை, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் பிரச்னை உள்ளிட்ட விஷயங்களை மட்டுமே பரப்புரையில் முன்வைத்தது. எனவே மக்கள் நாம் வெளியிட்ட அறிவிப்புகள் தான் ஏற்றுக் கொள்வார்கள் என்று ஏ.சிசண்முகம் அதீத நம்பிக்கை வைத்திருந்தார்.

a c shanmugam upset
ஏ.சி.சண்முகம்-4

ஆனால் தோல்வியை தழுவியதால் ஏ.சி சண்முகம் வெளியில் தலை காட்டாமல் உள்ளார். வழக்கமாக தேர்தல் தொடர்பான எந்த ஒரு அறிவிப்பாக இருந்தாலும் உடனுக்குடன் ஏ.சி சண்முகம் பத்திரிகையாளர்களை சந்திப்பார். ஆனால் தேர்தல் முடிவுக்குப் பிறகு தற்போது வரை அவர் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை.இதை வைத்து பார்க்கும்போது தேர்தல் முடிவு ஏ.சி. சண்முகத்திற்கு ஒரு மிகப் பெரிய மனஅழுத்தத்தை கொடுத்திருக்கும் என்றே கூறலாம்.


Intro:வேலூர் தேர்தல் தோல்விக்கு பின்பு வாய் திறக்காத ஏ சி சண்முகம்... முதல்வர்கள் அமைச்சர்கள் பரப்புரை மேற்கொண்டு தோல்வியைத் தழுவியதால் கடும் விரக்திBody:தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வேலூர் மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் துரைமுருகனின் மகனும் திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை விட 8141 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதனால் திமுகவினர் வேலூர் வெற்றியை கொண்டாடி வருகின்றனர் அதேசமயம் அதிமுக தரப்பில் முதல்வர் துணை முதல்வர் மற்றும் அனைத்து துறை அமைச்சர்களும் பரப்புரை மேற்கொண்டும் வெற்றி பெற முடியாததால் வேட்பாளர் உட்பட அனைவரும் களையிழந்து காணப்படுகின்றனர். இந்த நிலையில் தேர்தல் முடிவு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கூறு கையில்," இதுவும் எங்களுக்கு வெற்றி தான் என தெரிவித்தார் ஆனால் தற்போது வரை அதிமுக வேட்பாளர் ஏ சி சண்முகம் தேர்தல் முடிவு குறித்து வாய் திறக்காதது அவரது விரக்தியை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதாவது நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது முதல் ஆறு சுற்றுகளில் அதிமுக வேட்பாளர் ஏ சி சண்முகம் முன்னிலை வகித்து வந்தார் இதனால் மகிழ்ச்சியில் திளைத்த ஏ சி சண்முகம் வாக்கு எண்ணும் மையம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி இருந்தபடி நிலவரத்தை உடனுக்குடன் கேட்டு தெரிந்து கொண்டிருந்தார் ஆனால் நேரம் செல்ல செல்ல அடுத்தடுத்த சுற்றுகளில் திமுக முன்னணி பெற்றதால் ஏ சி சண்முகம் சோகத்தில் மூழ்கினார் ஒரு கட்டத்தில் இனி நம்மால் வெற்றி பெற முடியாது என்பதை அறிந்த ஏசி.சண்முகம் அங்கிருந்து நடையைக் கட்டினார் பின்னர் நேராக சென்னைக்கு சென்றதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் அரசியல் கட்சி தலைவர்கள் பொறுத்தவரை வெற்றியானாலும் தோல்வியானாலும் அதை ஏற்றுக்கொண்டு தங்களுக்குரிய மனநிலையில் கருத்துத் தெரிவிப்பார்கள் ஆனால் தேர்தல் முடிவு வெளியாகி நாட்களாகியும் இதுவரை ஏ.சி. சண்முகம் வாய் திறக்காமல் உள்ளார். ஏசி.சண்முகத்தைப் பொருத்தவரை இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறலாம் என 100% மனதில் நம்பிக்கை வைத்திருந்தார் இதற்கு காரணம் ஏற்கனவே இவர் இதே வேலூர் தொகுதியில் எம்ஜிஆர் இருந்தபோது 1984ல் அதிமுக சார்பில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் அதுமட்டுமில்லாமல் கடந்த 2014 பொதுத்தேர்தலில் திமுக அதிமுக ஆகிய பெரிய கட்சியோடு கூட்டணி அமைக்காமல் தேசிய கட்சியான பாஜக உடன் கூட்டணி வைத்து புதிய நீதிக்கட்சி சார்பில் வேலூர் மக்களவைத் தொகுதியில் ஏசி சண்முகம் மீண்டும் போட்டியிட்டார் அப்போது தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செங்குட்டுவனை விட வெறும் முப்பதாயிரம் வாக்குகள் மட்டுமே குறைவாகப் பெற்று தோல்வி அடைந்தார். இந்த சுறுசுறுப்புடன் தற்போது நடைபெற்ற தேர்தலில் அதிமுக பாமக தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணியில் இருப்பதாலும் அவர் சார்ந்த முதலியார் சமூகத்தினர் வேலூர் தொகுதியில் அதிகம் வசிப்பதாலும் நிச்சயம் வெற்றி நமக்குத்தான் என்ற நம்பிக்கையுடன் இருந்து வந்தார் தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்போதுகூட 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று கூறியிருந்தார் அதேபோல் ஏ.சி. சண்முகத்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த முதல்வர் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களும் வேலூரில் நிச்சயம் வெல்லப்போவது ஏசி சண்முகம் தான் என்று பேசி வந்தனர் அதேபோல் மக்களைக் கவர்வதற்காக வேலூரில் 6 சட்டமன்ற தொகுதிகளில் 2 கோடி மதிப்பில் தலா ஒரு திருமண மண்டபம் கட்டி தருவேன் எனது மருத்துவக் கல்லூரியில் ஏழை மாணவர்களுக்கு இலவச சீட் கொடுப்பேன் எனது மருத்துவமனை சார்பில் தொகுதி முழுவதும் அவ்வப்போது இலவச மருத்துவ முகாம் நடத்துவேன் என பல்வேறு அறிவிப்புகளை மக்கள் மத்தியில் வெளியிட்டார் அதேசமயம் திமுகவைப் பொறுத்தவரை வழக்கம்போல் பொதுவான பிரச்சனையான பாலாறு பிரச்சனை ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட விஷயங்களை மட்டுமே பிரச்சாரத்தில் முன்வைத்தது எனவே மக்கள் நாம் வெளியிட்ட அறிவிப்புகள் தான் ஏற்றுக் கொள்வார்கள் என்று ஏ.சி.சண்முகம் அதீத நம்பிக்கை வைத்திருந்தார் ஆனால் தேர்தல் முடிவு ஏ.சி.சண்முகத்தின் இந்த நம்பிக்கையை தலைகீழாக புரட்டிப்போட்டது ஒருபுறம் தோல்வியால் பாராளுமன்றத்திற்கு செல்ல முடியாமல் போனாலும் கூட, இத்தனை கூட்டணிக் கட்சி தலைவர்கள் மற்றும் முதல்வர் அமைச்சர் துணை முதல்வர் என அனைவரும் பரப்புரை செய்தும் தோல்வி அடைந்து விட்டோமே என்ற அவமானமும் ஏசி சண்முகம் கண்முன்னே அவ்வபோது வந்து செல்வதாகவே அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன இதனால் தேர்தல் முடிவுக்கு பிறகு ஏசி சண்முகம் வெளியில் தலை காட்டாமல் உள்ளார் வழக்கமாக தேர்தல் தொடர்பான எந்த ஒரு அறிவிப்பாக இருந்தாலும் உடனுக்குடன் ஏ சி சண்முகம் பத்திரிக்கையாளர்களை சந்திப்பார். ஆனால் தேர்தல் முடிவுக்குப் பிறகு தற்போது வரை அவர் பத்திரிக்கையாளர்களை சந்திக்கவில்லை இதை வைத்து பார்க்கும்போது தேர்தல் முடிவு ஏசி. சண்முகத்திற்கு ஒரு மிகப் பெரிய மன அழுத்தத்தை கொடுத்திருக்கும் என்றே கூறலாம்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.