ETV Bharat / state

"எல்லாத் துறைகளிலும் கருப்பு ஆடு உள்ளது... நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டி"- புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 2, 2023, 6:20 PM IST

A.C.Shanmugam: வருகின்ற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், புதிய நீதிக்கட்சி வேலூர் மக்களவைத் தொகுயில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

A.C.Shanmugam
புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பு

புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பு

வேலுர் : புதிய நீதிக்கட்சியின் வேலூர் சட்டப் பேரவைத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் வேலூரில் இன்று (டிச. 2) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தலைமை வகித்தார். இதில், கட்சி நிர்வாகிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், புதிய நீதிக்கட்சியானது வேலூர் மக்களவைத் தொகுதியில் நிச்சயமாக போட்டியிடும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்று நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக வருவார்.

  • புதிய நீதிக்கட்சியின் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேலூர், குடியாத்தம் மற்றும் வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் கூட்டம்.

    இக்கூட்டத்தில் மூன்று தொகுதிகளின் நிர்வாகிகளும் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

    - புதிய நீதிக்கட்சி pic.twitter.com/jI6H0lmh6K

    — A.C. Shanmugam (@DrACSofficial) December 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தற்போது நடைபெறும் 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்களில் இந்தியா கூட்டணி காணாமலேயே போய்விட்டது. அவர்களிடம் ஒற்றுமையில்லை. யார் பிரதமர் வேட்பாளர் என்பதைக்கூட கூற முடியாத நிலையில் உள்ளனர். பாஜக அரசு நாட்டின் வளர்ச்சியிலும், மக்களின் நலனிலும் முழு அக்கறையுடன் திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக, நிலவில் தண்ணீர் உள்ளது என்று கண்டுபிடித்து உலகுக்கு கூறியது, சமீபத்தில் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்டது. தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு பல திட்டங்களைக் கொண்டு வந்து செயல்படுத்தியது போன்றவற்றை கூறலாம். இதன் காரணமாக, வடமாநிலங்கள் முழுவதும் நரேந்திர மோடியின் பின்னால் நிற்கிறது. எனவே, மீண்டும் பிரதமராக வருவது உறுதி.

லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறையைச் சேர்ந்த அதிகாரி கைதாகி உள்ளார். எல்லாத் துறைகளிலும் கருப்பு ஆடு உள்ளது என்பது தான் உண்மை. அனைத்து மாநிலங்களிலும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பதே புதிய நீதிக்கட்சியின் நிலைப்பாடு ஆகும். எனவே, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளால் ஏழை, நடுத்தர குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றன. வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, இந்த மதுக்கடைகள் அனைத்தும் நிச்சயமாக மூடப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: "விஜயகாந்த் நல்ல உடல் நலத்துடன் உள்ளார், மீண்டு வந்து மீண்டும் ரசிகர்களை சந்திப்பார்" - நடிகர் நாசர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.