ETV Bharat / state

தீபாவளி பண்டிகைக்கு ஆவினில் சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 2, 2023, 10:17 PM IST

Aavin Diwali Sweet sales: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவினில் சுவையான சிறப்பு இனிப்பு வகைகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

aavin
aavin

வேலூர்: தீபாவளி பண்டிகையையொட்டி ஆவின் நிறுவனம் மூலம் தரமான, சுவையான இனிப்பு வகைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட உள்ளதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; "தமிழக அரசின் ஆவின் நிறுவனம் மூலம் 2023ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு வகைகள் அனைத்தும் தரமாகவும், சுவையாகவும் ஆவின் நெய்யினால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.

அதன்படி, வேலூர் சத்துவாச்சாரியில் அமைந்துள்ள ஆவின் நிறுவனம் மூலம் நெய் ஒரு லிட்டர் ரூ.700க்கும், அரை லிட்டர் ரூ.365க்கும், 200 மி.லி ரூ.160க்கும், பால் கோவா 500 கிராம் ரூ.250க்கும், 250 கிராம் ரூ.130க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது.

அதேபோல் மைசூர்பா 500 கிராம் ரூ.270க்கும், 250 கிராம் ரூ.140க்கும், மில்க் கேக் 250 கிராம் ரூ.120க்கும், நெய் லட்டு 200 கிராம் ரூ.125க்கும், பட்டர் முறுக்கு 200 கிராம் ரூ.80க்கும், மிக்சர் 200 கிராம் ரூ.100க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது.

தீபாவளி சிறப்பு இனிப்பு வகைகள் குறித்த விவரங்களுக்கு 97912 22890, 94863 36101 ஆகிய எண்களிலும், மொத்த தேவைக்கு 87786 77795 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். எனவே, பொதுமக்கள் ஆவின் நிறுவனத்தின் தரமான இனிப்பு வகைகளை வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆவின் பாலகங்கள், ஆவின் சில்லறை விற்பனையாளர்களிடம் இருந்து வாங்கி பயன்பெறலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதி வெட்டிக்கொலை.. திருமணமான 3வது நாளில் நிகழ்ந்த கொடூர சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.