ETV Bharat / state

ஆளுநர் முடிவைப் பொறுத்து எங்க முடிவு - துரைமுருகன் அதிரடி

author img

By

Published : Nov 28, 2022, 5:29 PM IST

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்காவது ஆளுநர் ஒப்புதலை அளிப்பார் என எதிர்ப்பார்க்கிறோம். அவரது முடிவை பொருத்து எங்களது முடிவு இருக்கும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

வேலூர்: பொன்னை ஆற்றின் குறுக்கே சுமார் ரூ 40 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை தமிழ்நாடு நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பொன்னையில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த கட்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், “தமிழ்நாட்டில் நிதி நிலை கடும் நெருக்கடியில் உள்ள கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் இப்போது தான் பதவி ஏற்ற பின்னர் அதனை சமாளித்து வருகிறோம். விரைவில் தமிழ்நாட்டை நிதி நெருக்கடியிலிருந்து மீட்கும் வரையில் பணிகள் படிப்படியாக தான் நடக்கும், அதுவரையில் கட்சியினர் ஒத்துழைப்பு நல்க வேண்டும்” என்றார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன், “தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் நேற்றுடன் காலாவதியானது. தற்போது மசோதாவுக்காவது ஆளுநர் ஒப்புதலை அளிப்பார் என எதிர்ப்பார்க்கிறோம். அவரது முடிவை பொருத்து எங்களது முடிவு இருக்கும். இந்த விடயத்தில் ஆளுநர் அரசியல் செய்து வருகிறார்” என்றார்.

ஆளுநர் முடிவைப் பொறுத்து எங்க முடிவு... துரைமுருகன் அதிரடி

இதையும் படிங்க: குஜராத் தேர்தல்: அல்லா சோம்நாத்தில் இருக்கிறார்.. முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.