ETV Bharat / state

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் பற்றி எரிந்த சொகுசு கார்!

author img

By

Published : Oct 25, 2020, 5:19 PM IST

வேலூர்: பள்ளிகொண்டா சுங்கச் சாவடிக்கு வந்த சொகுசு கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது.

பற்றி எரியும் கார்
பற்றி எரியும் கார்

சென்னை ஆவடியில் பேக்கரி கடை வைத்திருப்பவர் சக்கரபாணி. இவர், தனது உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக கர்நாடகா மாநிலம் ஹாசன் பகுதிக்கு காரில் சென்றார். அந்தக் காரில் இரண்டு ஆண்கள் மூன்று பெண்கள் பயணித்தனர்.

இந்நிலையில், இன்று (அக். 25) பிற்பகல் பள்ளிகொண்டா சுங்கச் சாவடிக்கு கார் வந்தது. அப்போது திடீரென சொகுசு கார் தீப்பற்றி எரிந்தது. இதனால் செய்வதறியாது திகைத்த சுங்கச் சாவடி ஊழியர்கள் தீயை அணைக்க முற்பட்டனர்.

பற்றி எரியும் கார்
பின்னர் பளூ தூக்கும் கனரக வாகனத்தின் உதவியுடன் காரை நெடுஞ்சாலைப் பகுதிக்கு கொண்டு வந்து, அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும், குடியாத்தத்தில் இருந்து வந்த தீயணைப்பு வாகனமும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டது. அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்த யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.

இதையும் படிங்க: திடீரென மாயமான சிறுவன் - தேடிவரும் தீயணைப்பு மீட்பு குழு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.