ETV Bharat / state

சத்துணவில் அழுகிய முட்டைகள் :ஆட்சியரின் திடீர் ஆய்வால் அம்பலமானது!

author img

By

Published : Dec 20, 2019, 10:38 AM IST

வேலூர்: அரசுப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது குழந்தைகளுக்கு அழுகிய முட்டை வழங்கிய சத்துணவு அமைப்பாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தலைமை ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.

collector
collector

வேலூர் மாவட்டம் காகிதப்பட்டறையில் மாநகராட்சி அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. பள்ளி கட்டடத்தின் மேற்கூரை இடிந்து காணப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் திடீரென அங்கு ஆய்வு மேற்கொண்டார்.

கட்டடத்தின் தன்மை குறித்தும், மாணவர்களின் கல்வித் திறன் குறித்தும் ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டார். பின்னர், மாணவர்களுக்கு உணவு தயாரிக்கும் சமையல் கூடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுக்கு உணவு தயார் செய்யக்கூடிய காய்கறிகள் அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்தது.

collector
அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொள்ளும் ஆட்சியர்

அழுகிய முட்டைகளை மாணவர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்ததையும் ஆட்சியர் கண்டுபிடித்தார். இதையடுத்து பணியில் அலட்சியமாக இருந்ததாக அந்தப் பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் அம்மு என்பவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு இதுதொடர்பாக விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அங்கான்வாடி குழந்தைகளுக்கு கெட்டுப்போன முட்டைகள்!

Intro:வேலூர் மாவட்டம்

வேலூர் அருகே அரசு பள்ளியில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு குழந்தைகளுக்கு அழுகிய முட்டை வழங்கிய சத்துணவு அமைப்பாளர் பணி இடைநீக்கம் தலைமை ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்Body:வேலூர் மாவட்டம் காகிதப்பட்டறையில் மாநகராட்சி அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது இங்கு கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து காணப் படுவதாக புகார் எழுந்தது இந்த நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் இன்று திடீரென காகிதப்பட்டறை அரசு பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார் அப்போது கட்டிடத்தின் தன்மையை குறித்தும் மாணவர்களின் கல்வித் திறன் குறித்தும் ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டார் பின்னர் திடீரென மாணவர்களுக்கு உணவு தயாரிக்கும் சமையல் கூடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார் அப்போது மாணவர்களுக்கு உணவு தயார் செய்யக்கூடிய காய்கறிகள் அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்தது மேலும் அழுகிய முட்டைகளை மாணவர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்ததையும் மாவட்ட ஆட்சியர் கண்டுபிடித்தார் இதையடுத்து பணியில் அலட்சியமாக இருந்ததாக அந்த பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் அம்மு என்பவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் சண்முகம் சுந்தரம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார் மேலும் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு இதுதொடர்பாக விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் வேலூர் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.