ETV Bharat / state

'வேலூர் தொகுதியில் நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்படும்..!' - ஆட்சியர் உறுதி

author img

By

Published : Jul 5, 2019, 10:59 PM IST

வேலூர்: "வேலூர் பாராளுமன்ற தொகுதியில் நியாயமான முறையில் தேர்தல் நடத்தி முடிக்கப்படும்" என்று, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.

அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூட்டம்

கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி இந்தியா முழுவதும் பாராளுமன்றத் தொகுதிகளுக்குத் தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில் மட்டும் பணப்பட்டுவாடா புகார் காரணமாகத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வேலூர் பாராளுமன்றத் தொகுதிக்கு தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்திருப்பதாக மாவட்ட ஆட்சியரும், வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முகசுந்தரம் தெரிவித்திருந்தார். இந்த தொகுதியில் மொத்தம் 14 லட்சத்து 26 ஆயிரத்து 991 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்நிலையில் தேர்தல் தொடர்பாக வேலூர் மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டம், இன்று நடைபெற்றது. இதில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய ஆட்சியர் சண்முகசுந்தரம், "வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் தேர்தல் நியாயமான முறையில் நடத்தி முடிக்கப்படும் என்ற உறுதியை நாங்கள் தருகிறோம். மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த பிரச்னையும் இல்லாமல் சுமுகமாகத் தேர்தல் நடத்த அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனவே இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும்" என்றார்.

ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூட்டம்

இதனையடுத்து விளம்பர பேனர்கள் வைப்பது, தேர்தல் முகாம் அமைப்பது போன்ற சந்தேகங்களுக்கு அலுவலர்கள் விளக்கம் அளித்தனர். தேர்தல் குறித்த உறுதிமொழிகளை வட்டாட்சியர் கூட்டத்தில் வாசித்தார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், துணை ஆட்சியர் மேக ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Intro:வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு நியாயமான முறையில் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் - அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உறுதி


Body:நாடு முழுவதும் உள்ள பாராளுமன்ற தொகுதி களுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் மட்டும் பணப்பட்டுவாடா புகார் காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில் கடந்த 4ம் தேதி வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது இதையடுத்து அன்றிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்திருப்பதாக மாவட்ட ஆட்சியரும் வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சண்முகசுந்தரம் தெரிவித்திருந்தார் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 14 லட்சத்து 26 ஆயிரத்து 991 வாக்காளர்கள் உள்ளனர் வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகின்றனர் இந்த நிலையில் தேர்தல் தொடர்பாக வேலூர் மாவட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சண்முக சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிமுக திமுக காங்கிரஸ் பாமக கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றனர் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், " வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் நியாயமான முறையில் நடத்தி முடிக்கப்படும் இதற்கான உறுதியை நாங்கள் தருகிறோம் மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக தேர்தல் நடத்த அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கூறினார் அதை தொடர்ந்து பேசிய அரசியல் கட்சி நிர்வாகிகள், '"விளம்பர பேனர்கள் வைப்பது மற்றும் தேர்தல் முகாம் அமைப்பது தொடர்பான தங்களின் சந்தேகங்களை கேள்விகளாக எழுப்பினர். அதற்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர் தொடர்ந்து தேர்தல் குறித்த உறுதிமொழிகளை தேர்தல் தாசில்தார் வாசித்தார் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பார்த்திபன் துணை ஆட்சியர் மேக ராஜ் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.