ETV Bharat / state

யானைகள் சேதப்படுத்திய விளை நிலங்களைப் பார்வையிட்ட ஆம்பூர் எம்.எல்.ஏ!

author img

By

Published : Dec 25, 2019, 5:07 PM IST

திருப்பத்தூர்: மாச்சம்பட்டு பகுதியில் புகுந்த காட்டு யானைகள் சேதப்படுத்திய விளை நிலங்களை ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் வில்வநாதன் பார்வையிட்டார்.

3 ஆவது நாளாக தொடரும் யானை நடமாட்டம்...  வேலூர் காட்டுயானைகள் அட்டகாசம்  elephant damage crops in thiruppathur district  திருப்பத்தூர் மாவட்டச் செய்திகள்  பயிர்களைசேதப்படுத்தும் யானைகள்  ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர்  ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் வில்வநாதனஅ
யானைகள் சேதப்படுத்திய விளைநிலங்களைப் பார்வையிட்ட ஆம்பூர் எம்.எல்.ஏ

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மாச்சம்பட்டு பகுதியில் கடந்த 23ஆம் தேதி விவசாய நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் கூட்டம் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை, தக்காளி, பூசணி உள்ளிட்ட பயிர்களை அழித்து நாசம் செய்தது.

ஆம்பூர் எம்.எல்.ஏ வில்வநாதன்

இதைத்தொடர்ந்து காப்புக்காடு பகுதிக்குள் புகுந்த யானைகள் அங்குள்ள விளை நிலங்களில் புகுந்து தொடர்ச்சியாக மூன்று நாட்களாக பயிர்களை நாசம் செய்துள்ளன. பந்தேர பல்லி பகுதியிலும் இதேபோன்று பயிர்களை யானை சேதப்படுத்தியுள்ளன. யானைகளை விரட்ட வனவர் சதீஷ் தலைமையில் 10க்கும் மேற்பட்ட வனவர்கள் அப்பகுதியில் முகாமிட்டு யானைகளை விரட்ட முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

யானைகள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். மேலும், விரைவாக யானைகளை காட்டுக்குள் விரட்டுமாறு வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விளைநிலங்களைப் பார்வையிட்ட ஆம்பூர் எம்.எல்.ஏ

இது குறித்து ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் வில்வநாதன் கூறுகையில், "யானைகள் சேதப்படுத்திய நிலங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க மாவட்ட ஆட்சியரிடத்தில் பேசியுள்ளேன். மேலும், யானைகள் இனி நிலப்பகுதிகளுக்குள் வராமல் தடுக்க வன அலுவலர்களுக்கு தகுந்த ஏற்பாடு செய்ய உத்தரவிட்டுள்ளேன்" என்றார்.

வன அலுவலர் ராஜ்குமார் பேசுகையில், "யானைகள் இடம்பெயர்தல் காரணமாக நிலப்பகுதிகளுக்கு வந்துள்ளதன. அதன் தேவைகள் தீர்ந்த பின் தானாக சென்றுவிடும். எனவே, மக்கள் தேவையில்லாமல் அச்சப்பட தேவையில்லை. மலையடிவார பகுதியில் 30க்கும் மேற்பட்ட வனக்காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விளைநிலங்களைப் பார்வையிட்ட ஆம்பூர் எம்.எல்.ஏ!

அதையும் மீறி யானைக்கூட்டத்தைப் பொதுமக்கள் கண்டால் தீப்பந்தம், மேளம், டார்ச் லைட் போன்றவற்றை உபயோகித்து பாதுகாப்பாக விரட்ட வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டு யானைகள் - கண்ணீரில் விவசாயிகள்

Intro:


Body:

ஆம்பூர் அருகே தொடரும் யானைகள் நடமாட்டம்...


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.