ETV Bharat / state

புதிய நீதிக்கட்சி யாருடன் கூட்டணி? - ஏ.சி.சண்முகம் விளக்கம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 8, 2023, 5:40 PM IST

Puthiya Needhi Katchi in NDA Alliance: நாடாளுமன்ற தேர்தல் என்பது யார் பிரதமர் என்பதற்கான தேர்தலே தவிர எம்பி யார் என்பதற்கான தேர்தல் இல்லை என்று கருத்து தெரிவித்துள்ள புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வதாக கருத்து தெரிவித்துள்ளார்.

புதிய நீதிக்கட்சி எப்போதும் பாஜக பக்கம்தான் - தலைவர் ஏ.சி.சண்முகம்!
புதிய நீதிக்கட்சி எப்போதும் பாஜக பக்கம்தான் - தலைவர் ஏ.சி.சண்முகம்!

புதிய நீதிக்கட்சி எப்போதும் பாஜக பக்கம்தான் - தலைவர் ஏ.சி.சண்முகம்!

வேலூர்: வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் புதிய நீதிக்கட்சியின் சார்பில் இலவச மருத்துவ முகாம் இன்று (8.10.2023) நடைபெற்றது. இதனை அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்.

இந்த முகாமில் எலும்பு சிறப்பு சிகிச்சை, பல் மருத்துவம், கண் சிகிச்சை மற்றும் பரிசோதனை, நீரிழிவு நோய் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை, தோல் நோய் சிகிச்சை, காது, மூக்கு, தொண்ட உள்ளிட்டவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பொதுமக்களிடம் ஏ.சி.சண்முகம் நேரடியாக சென்று முகாமில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். இவ்விழாவில் புதிய நீதிக்கட்சி நிர்வாகிகள் ரவிக்குமார், ஏ.சி.எஸ் அருண்குமார் மற்றும் திரளானோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: மருத்துவர்கள் பற்றாக்குறையை போக்க சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் - முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஏ.சி.சண்முகம் கூறுகையில் "புதிய நீதி கட்சி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே அங்கம் வகிக்கும். நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் யார் என்பது தான் முக்கியமே தவிர எம்.பி யார் என்பது அல்ல.

பாஜகவில் நான் வேலூர் தொகுதியில் போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெற்றேன். இருந்தாலும் தோல்வியடைந்தேன். அதன் பின்னரும் பாஜக கூட்டணியில் தான் போட்டியிட்டேன். 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினேன். இருந்தாலும் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்போம்.

மூன்றாவது முறையாக பாரத பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சி அமைத்து இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவார் என்ற நம்பிக்கை புதிய நீதி கட்சிக்கு இருக்கிறது. இந்தியாவை வல்லரசாக்க வேண்டுமென்றால், மீண்டும் நரேந்திர மோடி அவர்கள் பிரதமராக வேண்டுமென்ற நோக்கில் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளோம்" என கூறினார்.

இதையும் படிங்க: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 107 பதக்கங்கள் வென்று சாதனை.. பிரதமர், முதலமைச்சர் வாழ்த்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.