ETV Bharat / state

இரட்டை கொலை வழக்கு - இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

author img

By

Published : Sep 26, 2019, 10:30 PM IST

திருச்சி: லால்குடி அருகே நடந்த இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய இளைஞருக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சுதாகர்

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த திண்ணியம் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இது தொடர்பாக 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட தகராறில் பன்னீர்செல்வத்தின் சகோதரர்களான ரவி, ராமகிருஷ்ணன், இளங்கோவன் ஆகிய மூவரும் சேர்ந்து சுதாகரின் அண்ணனான சுரேஷை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.

இதற்கு பழி வாங்கும் வகையில் சுதாகர், 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி பன்னீர்செல்வத்தின் தாய் செல்லம்மாள், அத்தை அமராவதி, உறவினர் சதீஷ் ஆகிய மூவரையும் அரிவாளால் வெட்டினார். இதில் செல்லம்மாள், அமராவதி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த சதீஷ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இது குறித்து லால்குடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சுதாகரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.

வழக்கின் விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சுதாகர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் அபராதத் தொகையை கட்ட தவறினால் மேலும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.

Intro:திருச்சி அருகே நடந்த இரட்டை கொலை வழக்கில் வாலிபருக்கு இரு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.Body:திருச்சி:

திருச்சி அருகே நடந்த இரட்டை கொலை வழக்கில் வாலிபருக்கு இரு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் திண்ணியம் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர். இவரது குடும்பத்தினருக்கும் அதே தெருவைச் சேர்ந்த சுதாகர் (28) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு பன்னீர்செல்வத்தின் சகோதரர்கள் ரவி, ராமகிருஷ்ணன், இளங்கோவன் ஆகிய மூவரும் சுதாகரின் அண்ணன் சுரேஷை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.

இதற்கு பழி வாங்கும் வகையில் பன்னீர்செல்வத்தின் தாய் செல்லம்மாள், அத்தை அமராவதி, அதே பகுதியை சேர்ந்த சதீஷ் ஆகிய மூவரையும் கடந்த 14.-4-.2013ம் தேதி சுதாகர் அரிவாளால் வெட்டினார். இதில் செல்லம்மாள், அமராவதி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த சதீஸ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இது குறித்து லால்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து நீதிபதி முரளிசங்கர் இன்று தீர்ப்பளித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட சுதாகருக்கு இரு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறை விதிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். மேலும், சதீசை காயப்படுத்திய குற்றத்திற்காக சுதாகருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் அனுபவிக்க உத்தரவிட்டார். இரட்டை கொலை வழக்கில் வாலிபருக்கு இரு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:இரட்டை கொலை வழக்கில் வாலிபருக்கு இரு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.