ETV Bharat / state

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட டாஸ்மாக் பணியாளர்கள் முடிவு!

author img

By

Published : Oct 2, 2020, 7:34 PM IST

திருச்சி: டிசம்பர் மாதம் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட டாஸ்மாக் பணியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

டாஸ்மாக் பணியாளர்கள்
டாஸ்மாக் பணியாளர்கள்

தமிழ்நாடு ஏஐடியுசி டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் திருச்சி புத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
இந்த செயற்குழு கூட்டத்திற்கு மாநில தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் தனசேகரன், பொருளாளர் கோவிந்தராஜன், துணைத் தலைவர் ராயப்பன், மாவட்ட செயலாளர் காமராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
சிறப்பு அழைப்பாளராக ஏஐடியுசி மாநில நிர்வாக குழு உறுப்பினர் சுரேஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மாற்று அரசு பணி வழங்க வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கரோனா விடுமுறை காலத்தில் விற்பனையான மது பானங்களுக்கு 50 விழுக்காடு வட்டி, 50 விழுக்காடு அபராதம், 18 விழுக்காடு ஜிஎஸ்டி என வசூலிப்பதை டாஸ்மாக் நிர்வாகம் கைவிட வேண்டும்.
ஏற்கனவே வசூல் செய்யப்பட்ட 50 விழுக்காடு தொகையை விற்பனையாளர்களுக்கு திரும்ப ஒப்படைக்க வேண்டும். கரோனா தொற்று காரணமாக உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர்களுக்கான நிதி உதவியை ரூ.50 லட்சமாக உயர்த்தி அளிக்க வேண்டும்.
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் டிசம்பர் மாதம் பொது வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
டாஸ்மாக் அனைத்து பணியாளர்கள் சங்கமும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்கிறது. இதற்காக அக்டோபர், நவம்பர் மாதங்களில் மண்டல அளவிலான மாவட்ட மாநாடுகள் நடத்தப்படும். இந்த மாநாட்டில் நிலைநிறுத்த போராட்டத்திற்கான ஆயத்த நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.