ETV Bharat / state

லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம்

author img

By

Published : Jan 7, 2023, 12:30 PM IST

மார்கழி மாத திருவாதிரை தினத்தை முன்னிட்டு லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சப்தரிஷீஸ்வரர் கோயில்
சப்தரிஷீஸ்வரர் கோயில்

சப்தரிஷீஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்...

லால்குடி: திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் கோயிலில், மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் விமரிசையாக நடைபெற்றது. ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை தினத்தில் ஆருத்ரா தரிசன உற்சவம் வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.

சிவபெருமானுக்கு நடத்தப்படும் உயர் ஆறுவகை அபிஷேகங்களில் ஒன்று ஆருத்ரா தரிசனம் திருமஞ்சனம். திருவாதிரை என்ற சொல் சமஸ்கிருதத்தில் ஆருத்ரா என குறிப்பிடப்படுகிறது. திருவாதிரை அன்று நடராஜருக்கு செய்யப்படும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளை ஆருத்ரா தரிசனம் என அழைக்கப்படுகிறது.

சிவ பூஜை செய்தால் தான் பலன், ஆனால் ஆருத்ரா தரிசனத்தை கண்டாலே புண்ணிய பலனை அள்ளித்தரக் கூடியது என பக்தர்களால் சொல்லப்படுகிறது. கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கிய ஆருத்ரா தரிசனம் இன்று (ஜன.7ஆம் தேதி) வரை நடைபெறுகிறது. ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் இரவு சந்திரசேகர் நடன மண்டபத்தில் சுவாமி பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதி உலா மற்றும் மகாபிஷேகம் நடைபெறும்.

இதனைத் தொடர்ந்து ஆருத்ரா தரிசனத்தின் முக்கிய நிகழ்வான நடராஜப் பெருமான் ஆனந்த தரிசனம், திருவீதி உலா நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஆன்மீக சொற்பொழிவுகள், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: புளியந்தோப்பில் பிரபல ரவுடி வெட்டி கொலை - மனைவி முன் நடந்த கொடூரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.