ETV Bharat / state

திருச்சியில் 45,185 வழக்குகள் நிலுவை - நீதிபதி முரளி சங்கர்

author img

By

Published : Dec 2, 2019, 5:03 PM IST

திருச்சி :  45,185 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முரளி சங்கர் கூறினார்.

trichy court opening
trichy court opening

திருச்சி நீதிமன்ற வளாகத்தில் நான்காவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தை மாவட்ட ஆட்சியர் சிவராசு, முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி முரளி சங்கர் ஆகியோர் இன்று குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

அதன்பின் பேசிய ஆட்சியர் சிவராசு, தமிழ்நாடு அரசு வழக்குகளை விரைவாக முடிக்க வேண்டும் என்பதற்காக புதிய நீதி மன்றங்கள் கூடுதலாக கட்டித் தரப்படுகின்றன. தமிழ்நாடு அரசு நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. புதிய நீதிமன்றங்களை ஏற்படுத்துவதால் வழக்குகளை விரைந்து முடிக்க உதவும். முதன்மை மாவட்ட நீதிபதி அவர்களின் கோரிக்கையின்படி லால்குடி, ஸ்ரீரங்கம் மெயின்ரோட்டில் வருவாய் துறையின் மூலம் இடம் கண்டறியப்பட்டு இரண்டு ஏக்கர் அளவில் புதிய நீதிமன்ற கட்டடம் கட்டுவதற்கு விரைவில் இடம் வழங்கப்படும் எனக் கூறினார்.

திருச்சி நீதிமன்ற வளாகத்தில் நான்காவது கூடுதல் சார்பு நீதிமன்ற துவக்க விழா

அதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதி முரளி சங்கர், திருச்சி மாவட்டத்தில் 43 நீதிமன்றங்கள் உள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை மணப்பாறையில் புதிய சார்பு நீதிமன்றம் திறந்து வைக்கப்பட்டது. கடந்த மாதம் உயர் நீதிமன்ற உத்தரவின்படி புதிய சார்பு நீதிமன்றங்கள் கூடுதலாக ஏற்படுத்தப்படுத்தப்பட்டன. திருச்சியில் 45,185 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 28,782 உரிமையியல் வழக்குகளும் 16,403 குற்றவியல் வழக்குகளும், நிலுவையில் உள்ளன. சார்பு நீதிமன்றங்களில் 8,784 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று கூறினார்.

இதையும் படிங்க:

திருச்சியில் 900 மாணவர்கள் பங்கேற்ற ஓவியப் போட்டி.!

Intro:திருச்சியில் 45,185 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முரளி சங்கர் கூறினார்.Body:

திருச்சி:
திருச்சியில் 45,185 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முரளி சங்கர் கூறினார்.
திருச்சி நீதிமன்ற வளாகத்தில் நான்காவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தை மத்திய மண்டல காவல்துறை தலைவரும், திருச்சி மாநகர காவல்துறை முன்னாள் ஆணையருமான அமல்ராஜ் முன்னிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி முரளிசங்கர் ஆகியோர் இன்று குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.

அப்போது ஆட்சியர் சிவராசு பேசுகையில்,

தமிழக அரசு வழக்குகளை விரைவாக முடிக்க வேண்டும் என்பதற்காக புதிய நீதி மன்றங்கள் கூடுதலாக கட்டித் தரப்படுகின்றன. தமிழக அரசு நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. புதிய நீதிமன்றங்கள் ஏற்படுத்துவதால் வழக்குகளை விரைந்து முடிக்க உதவும். முதன்மை மாவட்ட நீதிபதி அவர்களின் கோரிக்கையின் படி லால்குடி, ஸ்ரீரங்கம் மெயின்ரோட்டில் வருவாய் துறையின் மூலம் இடம் கண்டறியப்பட்டு 2 ஏக்கர் அளவில் புதிய நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கு விரைவில் இடம் வழங்கப்படும்.

திருச்சி மாநகரில் நீதிபதிகளின் குடியிருப்புக்காக மிக விரைவில் இடம் தேர்வு செய்யப்பட்டு ஒப்படைக்கப்படும் என்றார்.

முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி முரளி சங்கர் பேசுகையில்,

திருச்சியில் 43 நீதிமன்றங்கள் உள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை மணப்பாறையில் புதிய சார்பு நீதிமன்றம் திறந்து வைக்கப்பட்டது. இலால்குடி, ஸ்ரீரங்கத்தில் புதிய நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் உயர் நீதிமன்ற உத்தரவின்படி புதிய சார்பு நீதிமன்றங்கள் கூடுதலாக ஏற்படுத்தப்படுகின்றன. திருச்சியில் 45,185 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 28,782 உரிமையியல் வழக்குகளும் 16,403 குற்றவியல் வழக்குகளும், நிலுவையில் உள்ளன. சார்பு நீதிமன்றங்களில் 8,784 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஏற்கனவே 2 சார்பு நீதிமன்றம் உள்ளன என்றார்.

இந்நிகழ்ச்சியில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கிருபாகரன் மதுரம், இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி குணகேரன், திருச்சி மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தலைவர் ரமேஷ் நடராஜன், செயலர் ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.