ETV Bharat / state

சொந்த மாவட்டத்தில் நீட் தேர்வு மையம் அமைக்க மாணவி கோரிக்கை!

author img

By

Published : Jun 7, 2019, 12:15 PM IST

திருச்சி: நீட் தேர்வு எழுத சொந்த மாவட்டத்தில் தேர்வு மையம் அமைத்தால் தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பதற்றம் இருக்காது என நீட் தேர்வில் மாநில அளவில் 5ஆம் இடம் பிடித்த மாணவி பிரியங்கா தெரிவித்துள்ளார்.

மாணவி பிரியங்கா

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அக்ஷயா அகாதெமி பள்ளியிலிருந்து 22 பேர் 2019-2020ஆம் கல்வியாண்டிற்கான நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளனர். இதில் ஒட்டன்சத்திரம் கிராமப் பகுதியைச் சேர்ந்த பிரியங்கா என்ற மாணவி 643 மதிப்பெண் பெற்று மாநில அளவில் ஐந்தாமிடம் பிடித்துள்ளார். நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளியில் வைத்து பெரிய கேக் வெட்டி பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.

பின்னர் மாநில அளவில் ஐந்தாம் இடம் பிடித்த மாணவி பிரியங்கா செய்தியாளர்களை சந்தித்துக் கூறுகையில், "எனக்கு பள்ளியில் நீட் தேர்வுக்கென தனியான பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் இந்த தேர்வுக்காக பெற்றோர் என்னை மிகவும் ஊக்குவித்தனர். நீட் தேர்வு எழுத சொந்த மாவட்டத்தில் தேர்வு மையம் அமைத்தால் தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பதற்றம் இருக்காது" என தெரிவித்தார்.

மாணவி பிரியங்கா
Intro:நீட் தேர்வில் மாநில அளவில் ஐந்தாம் இடம் பிடித்த கிராமப்புற மாணவி மற்றும் தேர்ச்சி பெற்ற 21 மாணவ மாணவிகளுக்கு கேக் வெட்டி பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது


Body:திண்டுக்கல்
ஒட்டன்சத்திரம்& பழநி
ம.பூபதி. ஜூன்:07

நீட் தேர்வில் மாநில அளவில் ஐந்தாம் இடம் பிடித்த கிராமப்புற மாணவி மற்றும் அவருடன் தேர்ச்சி பெற்ற 27 மாணவ மாணவிகளுக்கு கேக் வெட்டி பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே இயங்கி வரும் தனியார் பள்ளி ஆன அக்ஷயா அகாடமியின் மாணவர்கள் 22 பேர் 2019- 2020 கல்வியாண்டிற்கான நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளனர் இதில் ஒட்டன்சத்திரம் கிராமப் பகுதியைச் சேர்ந்த CBSC பள்ளி மாணவியான பிரியங்கா 643 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் ஐந்தாம் இடம் பிடித்துள்ளார் மேலும் இவருடன் எழுதிய மாணவ மாணவிகள் 21 பேர் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர் இதுகுறித்து பள்ளி மேலாளர் பட்டாபிராமன் கூறுகையில் 22 மாணவர்களில் முதல் 10 மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வியை துவங்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறினார் முன்னதாக தேர்வில் வெற்றி பெற்ற 72 மாணவ மாணவிகளுக்கும் பெரிய கேக் வெட்டி ஊட்டி பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர் இதுகுறித்து பேட்டி கொடுத்த மாணவி பிரியங்கா நீட் தேர்வு என்பது பெரிய தேர்வு அல்ல பள்ளியில் நீட் தேர்வுக்கு என தனியான பயிற்சி அளிக்கப்பட்டது மேலும் எனது பெற்றோர் என்னை ஊக்குவித்தனர்.
தேர்வு கடினமாக இல்லை. நான் மதுரையில் உள்ள நீட் தேர்வுமைய்யத்தில் தேர்வு எழுதினேன் மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுத சொந்த மாவட்டத்தில் தேர்வு மையம் அமைத்தால் தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பதட்டம் இருக்காது என தெரிவித்தார்.
நீட் தேர்வை பார்த்து அச்சப்படத் தேவையில்லை என்றும் கூறினார் .

பேட்டி: பிரியங்கா -மாநில அளவில் ஐந்தாவது இடம் பிடித்தவர்.


Conclusion:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அக்ஷயா அகாடமி தனியார் பள்ளியில் நீட் தேர்வில் மாநில அளவில் 5வது இடம் பிடித்த மாணவி மற்றும் 21. மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் கேக் வெட்டி பாராட்டு விழா நடைபெற்றது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.