ETV Bharat / state

ஆன்லைன் ரம்மி விளையாடிய கணவர்- கண்டித்த மனைவி படுகொலை

author img

By

Published : Jul 8, 2022, 8:48 PM IST

மனைவியை கொன்றுவிட்டு உடலில் மஞ்சள் மிளகாய்தூள் தூவி பிளாஸ்டிக் கவரில் சுற்றி வீட்டில் மறைத்து வைத்து தலைமறைவான கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மனைவியை சைக்கோ பாணியில் கொன்ற கணவன்-அனல் பறக்கும் க்ரைம் சீன்
மனைவியை சைக்கோ பாணியில் கொன்ற கணவன்-அனல் பறக்கும் க்ரைம் சீன்

திருச்சி: சமயபுரம் சக்தி நகரை சேர்ந்தவர் நரசிம்மராஜ். தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விற்பனை செய்து வரும் இவர் மீது பல வழக்குகள் உள்ளது. இவரின் மனைவி சிவரஞ்சனி(27). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் சமயபுரத்தில் உள்ள தனது சொந்த வீட்டை விற்ற நரசிம்மராஜ், தனது மனைவி, குழந்தைகள் மற்றும் தாய் வசந்தகுமாரி ஆகியோருடன் தாளகுடி சாய் நகர் அப்துல் கலாம் தெருவில் வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்தார்.

இந்நிலையில் ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் இவருக்கு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக வீடு விற்று கிடைத்த பணத்தை சூதாட்டத்தில் தொலைத்து வந்துள்ளார். இது தொடர்பாக அவருக்கும் மனைவிக்கும் மனக்கசப்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஆந்திரா விஜயவாடாவில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு தனது தாய் மற்றும் குழந்தைகளுடன் சென்றுள்ளார்.

தனது மனைவி சிவரஞ்சனிக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் குழந்தைகளை பார்த்துக் கொள்ளுமாறும், கரோனா சரியானவுடன் வந்து அழைத்து கொள்வதாகவும் கூறி குழந்தைகளை விட்டு விட்டு தாயுடன் புறப்பட்டு சென்றுள்ளார். திருச்சியில் உள்ள சிவரஞ்சனியுடன் அடிக்கடி செல்போனில் பேசும் அவரது குடும்பத்தினர் கடந்த 3 நாட்களாக பேசாமல் இருப்பதை கண்டு, அவரை பார்ப்பதற்காக தாளகுடி சாய் நகருக்கு வந்துள்ளனர்.

ஆனால் அங்கு வீடு 3 நாட்களாக பூட்டிக்கிடப்பதாக வீட்டின் உரிமையாளர் தொிவித்துள்ளார். இருப்பினும் குடும்பத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்து உள்ளனர். அப்போது வீட்டின் உள்ளே சிவரஞ்சனியின் கால்கள் மட்டும் தொிந்துள்ளது. இதனை தொடர்ந்து பரபரப்படைந்த குடும்பத்தினர் வீட்டை திறந்து பார்த்த போது பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்ட நிலையில் கட்டிலுக்கு கீழே சிவரஞ்சனியின் பிணம் கிடந்துள்ளது.

இது குறித்து கொள்ளிடம் போலீசாருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் போலீசார் அங்கு வந்து நடத்திய சோதனையில் கத்தி குத்து காயங்களுடன் காணப்பட்ட, பிணத்தின் மீது மஞ்சள் துாள், மிளகாய் துாள் துாவி, பிளாஸ்டிக்கினால் சுற்றி கட்டிலுக்கு கீழே கிடத்தப்பட்டு இருந்துள்ளது.

சூதாட்டத்தில் ஈடுபட்டதை கண்டித்த மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து, துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்காக மிளகாய், மஞ்சள் பொடி துாவி பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி வைத்த விட்டு தாயுடன் நரசிம்மராஜ் எஸ்கேப்பாகி உள்ளது போலீசார் முதற்கட்ட விசாரணையில் தொிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து வழக்கு பதிந்த கொள்ளிடம் போலீசார் நரசிம்மராஜ், தாய் வசந்தகுமாரி ஆகியோரை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:மனைவியைக் கொலை செய்த கணவர், சடலத்தின் அருகிலேயே படுத்து உறங்கிய அதிர்ச்சி சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.