ETV Bharat / state

அண்ணாமலை பேச்சுக்கு அஞ்சக்கூடிய நிலையில் நாங்கள் இல்லை.. அன்பில் மகேஷ் பொய்யாமொழி..

author img

By

Published : Dec 24, 2022, 10:34 AM IST

நம்ம ஸ்கூல் திட்டம் குறித்து எதிர்க்கட்சி தலைவரின் விமர்சனத்தை மாணவர்களின் நன்மைக்கு தான் என எடுத்து கொள்வோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை பேச்சுக்கு அஞ்சக் கூடிய நிலையில் நாங்கள் இல்லை..! - அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அண்ணாமலை பேச்சுக்கு அஞ்சக் கூடிய நிலையில் நாங்கள் இல்லை..! - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

திருச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் நடந்த கலைத்திருவிழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி திருச்சியில் நேற்று (டிச.24) நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

அண்ணாமலை பேச்சுக்கு அஞ்சக் கூடிய நிலையில் நாங்கள் இல்லை..! - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

திருச்சி மாவட்டம் முழுவதும் பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற 450 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , ”திருச்சி மாவட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குவதை பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் எண்ணுகிறேன்.

படி, படி என்ற கட்டத்தை தாண்டி மாணவர்களுக்கு மன தளர்வை ஏற்படுத்தும் வகையில், இதுபோன்ற கலை போட்டிகள் நடத்தப்படுகிறது. அதன் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் பலரது திறமையும் கண்டு வியக்கிறேன். அனைவரும் மாணவர்களின் திறமைகளை கண்டு பாராட்டுகளை தெரிவிக்கிறார்கள். இந்தத் துறையில் இருப்பதை எண்ணி பெருமைப்படுகிறேன்.

மாணவர்கள் வாசிப்பு திறனையும் கற்றுக் கொள்ள வேண்டும். மற்ற குழந்தைகளுடன், நமது குழந்தைகளின் திறமைகளை ஒப்பிடாதீர்கள். நமது குழந்தைகளுக்கு என்று தனி திறமைகள் இருப்பதை பெற்றோர்கள் உணர வேண்டும் எனத் தெரிவித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ”நம்ம ஸ்கூல் திட்டம்’ குறித்து எதிர்க்கட்சி தலைவரின் விமர்சனத்தை மாணவர்களின் நன்மைக்கு தான் என எடுத்து கொள்வோம். பள்ளிக்கல்வித்துறையில் இதுபோன்ற பள்ளிக்கு நன்கொடை வழங்கும் திட்டங்கள் காமரஜர் காலத்திலிருந்தே உள்ளது.

நம்ம ஸ்கூல் திட்டத்தில் அதை முறைப்படுத்தியுள்ளோம். எதிர்க்கட்சி தலைவர் என்கிற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து தந்த அறிக்கைக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் பதில் அறிக்கை விரைவில் தரப்படும். அண்ணாமலையின் பேச்சுக்கு அஞ்ச கூடிய நிலையில் நாங்கள் இல்லை. அர்த்தமே இல்லாமல் வைக்கும் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லத் தேவையில்லை. உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என்று முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

அதன்படி எங்கள் வேலை நாங்கள் பார்க்கிறோம். புதுச்சேரியில் மாநில பாடத்திட்டத்தை ரத்து செய்து விட்டு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்கிற அறிவிப்பு, புதுச்சேரி அரசுக்கு வெளியிலிருந்து யார் யாரோ கொடுக்கும் நெருக்கடியால் தான் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு திமுக அரசு அமையும் போது இதுபோன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் முடிவு கட்டுவோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பொங்கல் பரிசுத்தொகுப்பில் செங்கரும்பு இல்லை - விவசாயிகள் வேதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.