ETV Bharat / state

"தமிழகத்தில் அதிமுக எதிர்கட்சி இல்லை, ஆளுநர் எதிர்கட்சியாக செயல்படுகிறார்" - காதர் மொகிதீன்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2023, 12:29 PM IST

Khader Mohideen criticized governor: தமிழகத்தில் அதிமுக எதிர்கட்சி இல்லை, ஆளுநர்தான் மோசமான எதிர்கட்சியாகயாக தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டு இருந்து வருகிறார் என ஐயுஎம்எல் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் விமர்சித்துள்ளார்.

ஐயுஎம்எல் தேசிய தலைவர் காதர் மொகிதீன்
தமிழகத்தில் அதிமுக எதிர்க்கட்சி இல்லை ஆளுநர் எதிர்க்கட்சியாக செயல்படுகிறார்

தமிழகத்தில் அதிமுக எதிர்க்கட்சி இல்லை ஆளுநர் எதிர்க்கட்சியாக செயல்படுகிறார்

திருச்சி: திருச்சி பிரஸ் கிளப்பில் நேற்று (நவ.22) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன், அகில இந்திய கேரளா முஸ்லிம் கலாச்சார மையம் சார்பில் தமிழகத்தில் 75 இலவச திருமணங்கள் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், ஏற்கனவே சென்னையில் 17 திருமணங்கள் நடைபெற்ற நிலையில் இன்றைய தினம், திருச்சி சிறுகனூரில் உள்ள எம்ஏஎம் பொறியியல் கல்லூரியில் 25 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று இந்த திருமணத்தை நடத்தி வைக்க உள்ளதாகவும், வரும் ஆண்டுகளில் 100 ஜோடிகளுக்கு இலவசத் திருமணம் செய்து வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து தொகுதி ஒதுக்கீடு குறித்து பேசிய அவர், “ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தமிழகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளது. தற்போது நவாஸ்கனி எம்பி, இராமநாதபுரம் எம்பியாக உள்ளார். மீண்டும் அங்கேயே நிற்க வேண்டும் என பலரும் விரும்புவதால், தொகுதி ஒதுக்கீடு என்பது கூட்டணி கட்சித் தலைமையே முடிவு செய்யும். தற்போதும் ராமநாதபுரத்தையே ஒதுக்குவார்கள். இல்லாவிட்டால், அடுத்தது பற்றி யோசிப்போம்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: அமைச்சர் உதயநிதியை ஒருமையில் திட்டியதாக முன்னாள் பாஜக பிரமுகர் கைது!

மேலும், ஆளுநர் குறித்து அவர் பேசுகையில், “இதுவரை தமிழகத்துக்கு வந்த ஆளுநர்கள் தமிழகத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களாகவே இருந்தார்கள். ஆனால், தற்போதைய ஆளுநர் ஆதரவாக இல்லாமல், எதிர்கட்சியாக உள்ளார். தமிழகத்தில் அதிமுக எதிர்க்கட்சி இல்லை, ஆளுநர்தான் மோசமான எதிர்கட்சியாக தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டு இருந்து வருகிறார்.

சட்டத்தை உதாசீனப்படுத்தி செயல்பட்டு வருகிறார். உச்ச நீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக நல்ல தீர்ப்பு வரும். அப்போது தமிழக அரசு நிறைவேற்றி உள்ள அனைத்து தீர்மானங்கள், மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றி, ஆளுநரால் ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேறும்” என தெரிவித்தார்.

தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல் குறித்து பேசிய அவர், “ஐந்து மாநிலத் தேர்தல் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்தியா கூட்டணியில் உள்ளவர்களுக்கு அதிக வெற்றி வாய்ப்பு உள்ளதாகவே கூறப்படுகிறது. வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் கூட இது பிரதிபலிக்கும். ஸ்டாலின் கூறுவது போல, வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல் பாஜகவை தூக்கி எறியக்கூடிய தேர்தலாக அமையும்” என்று தெரிவித்தார்.

மேலும், “நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதி கொடுத்துள்ளனர். இரண்டு தொகுதி கொடுத்தால் நன்றாக இருக்கும். கூட்டணி எடுக்கும் முடிவு நன்றாக இருக்கும், நீண்ட காலம் சிறையில் வாடும் சிறைவாசிகள் சிறிது சிறிதாக விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். அவர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கின்றனர்” என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: விழுப்புரத்தில் நீட் தேர்வுக்கு எதிராக 5 லட்சம் கையெழுத்துக்களைப் பெற வேண்டும் - அமைச்சர் பொன்முடி அறிவுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.