ETV Bharat / state

"ஜல்லிக்கட்டு கமிட்டிக்கு தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் துணை நிற்க வேண்டும்" - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 16, 2024, 9:21 PM IST

Updated : Jan 16, 2024, 11:00 PM IST

ADMK Ex Minister Vijayabaskar: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்துள்ள பெரிய சூரியூர் பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற விஜய பாஸ்கரின் காளை வெற்றி பெற்றது.

திருச்சி
திருச்சி
"ஜல்லிக்கட்டு கமிட்டிக்கு தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் துணை நிற்க வேண்டும்" - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!

திருச்சி: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்துள்ள பெரிய சூரியூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கரின் காளை கலந்து கொண்டு வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர், "தமிழகத்தின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு‌ புதுக்கோட்டை தச்சங்குறிச்சி பகுதியில் நடைபெற்றது. தற்போது மதுரை மற்றும் திருச்சியில் இன்று (ஜன.16) ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனது பொதுவான வேண்டுகோள் அரசு ஜல்லிக்கட்டுக்கு முக்கியத்துவம் வழங்கி, துணை நிற்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு விழா என்பது 20 கல்யாணத்தை ஒரே நேரத்தில் நடத்துவது போல மிகவும் கஷ்டமானது. எல்லா துறையும் இணைந்து செயல்பட்டு உள்ளனர். மாட்டின் உரிமையாளர்களும் மாடுபிடி வீரர்களும் உற்சாகமாக இருப்பதால் இன்னும் அதிக அளவில் பாதுகாப்பினை ஏற்படுத்திட வேண்டும்.

ஆன்லைன் மூலமாக டோக்கன் வழங்கக் கூடாது என தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். மாடு படி டோக்கன் கொண்டு வந்தால் தான் சிறப்பாக இருக்கும். அப்போது தான் டோக்கனை கணக்கிட்டு அந்த நேரத்திற்கு வரலாம். சில இடங்களிலே இந்த நடைமுறை செயல்பட்டு வருகிறது. சில இடத்திலே ஒத்துழைப்பு இல்லை. நாம் ஜாதி பேதமின்றி, கட்சி பேதமின்றி இந்த ஜல்லிக்கட்டு விழாவை நடத்துகிறோம். இந்த நேரத்தில் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "இலங்கையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவிற்கு என்னை அழைத்தார்கள். ஆனால் என்னால் போக முடியவில்லை. இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமானுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மிகப்பெரிய ஜல்லிக்கட்டு ஆர்வலர். நம்முடைய மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் ஜல்லிக்கட்டைக் கடல் கடந்தும் தமிழருடைய பெருமை‌யை பறைசாற்றி வருகிறார்.

ஜல்லிக்கட்டு விழா நடத்தக்கூடிய கமிட்டிக்கு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகமும் துணை நிற்க வேண்டும். மாடு பிடி வீரர்களும் உரிமையாளர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். இப்பொழுது இது பாதுகாப்பான விளையாட்டாக மாறி உள்ளது. உச்சநீதிமன்றத்தின் சட்டதிட்ட நெறிமுறைகளைச் செயல்படுத்தி வருவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டில் கிடைத்த பரிசு கார்.. விலை என்ன? ரகம் என்ன தெரியுமா?

Last Updated : Jan 16, 2024, 11:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.