ETV Bharat / state

வேலை நிறுத்தப் போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர் சங்கம் பங்கேற்கும்!

author img

By

Published : Jan 6, 2020, 12:06 PM IST

திருச்சி: ஜனவரி 8ஆம் தேதி நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர் சங்கம் பங்கேற்கும் என, அச்சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Teachers Association meeting Trichy
Teachers Association meeting Trichy

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் திருச்சி சையது முதர்ஸா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் அப்பாத்துரை தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 20 மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இதில், புதிய தேசிய கல்விக் கொள்கை ரத்து செய்ய வேண்டும், அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில செயற்குழு கூட்டம்

இதைத் தொடர்ந்து, அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றக்கோரி பிப்ரவரி 6ஆம் தேதி மாவட்ட தலைநகரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. மேலும், ஜனவரி 8ஆம் தேதி நடக்கயிருக்கும் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் திரளாக பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: ‘முறையற்ற செயலை செய்து அதிமுக வெற்றி’ - திருப்பூர் எம்.பி. விமர்சனம்!

Intro:ஜனவரி 8ம் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்வது என இடைநிலை ஆசிரியர் சங்கம் முடிவு செய்துள்ளது. Body:திருச்சி:
ஜனவரி 8ம் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்வது என இடைநிலை ஆசிரியர் சங்கம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் அப்பாத்துரை தலைமையில் திருச்சி சையது முதர்ஸா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் வரவேற்றார்.
மாநில தணிக்கையாளர் ஜெயராணி, அமைப்புச் செயலாளர் வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வரவு செலவு அறிக்கையை மாநில பொருளாளர் பிரகாசம் சமர்ப்பித்தார். எட்வின்பிரகாஷ் இதழ் அறிக்கையை சமர்ப்பித்தார். வேலை அறிக்கை பொதுச் செயலாளர் சங்கர் சமர்ப்பித்தார். கூட்டத்தில் 20 மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: அரசு, அரசு உதவிபெறும், உயர் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியராக உட் படுத்த வேண்டும். 10 ,11, 12ம் வகுப்புகளுக்கு நடைபெறும் அரசு பொதுத்தேர்வு அறை கண்காணிப்பு பணியில் இருந்து முற்றிலுமாக விலக்களிக்க வேண்டும். புதிய தேசிய கல்விக் கொள்கை ரத்து செய்ய வேண்டும். அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும். அனைத்து கோரிக்கையும் நிறைவேற்றக் கோரி பிப்ரவரி 06 மாவட்ட தலைநகரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், மற்றும் ஜனவரி 8 ஆம் தேதி நடக்கவிருக்கும் அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்தில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் திரளாக பங்கேற்பது என தீர்மானம் செய்யப்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.