ETV Bharat / state

பல பெண்களுடன் தொடர்பில் இருந்த கணவன்; காவல்நிலையம் முன் பெண் குடும்பத்துடன் தர்ணா

author img

By

Published : Jan 11, 2023, 7:10 AM IST

லால்குடி அருகே பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததை தட்டிக்கேட்ட மனைவியை வரதட்சணை கேட்டு அடித்து கொடுமை படுத்திய கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் குழந்தையுடன் காவல் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

பல பெண்களுடன் தொடர்பில் இருந்த கணவன்; காவல்நிலையம் முன் பெண் குடும்பத்துடன் தர்ணா
பல பெண்களுடன் தொடர்பில் இருந்த கணவன்; காவல்நிலையம் முன் பெண் குடும்பத்துடன் தர்ணா

பல பெண்களுடன் தொடர்பில் இருந்த கணவன்; காவல்நிலையம் முன் பெண் குடும்பத்துடன் தர்ணா

திருச்சி: மண்ணச்சநல்லூர் அருகே நெய்குப்பை கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும், ஈரோடு மாவட்டம் சூளை பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான பிரசாந்த் (27) என்பவருக்கும் மேட்ரிமோணி மூலம் வரன் பார்த்து கடந்த 2 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு தற்போது 1 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

திருமணத்திற்கு பிறகு பிரசாந்த் கர்நாடக மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் பிரசாந்த் பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததை அவரது செல்போனில் பதிவு செய்துள்ளாராம். இதனை அறிந்த மனைவி பிரசாந்த்திடம் கேட்டதற்கு அவரை அடித்து உதைத்து துன்புறுத்தி, திருச்சியில் உள்ள பெற்றோர் வீட்டில் கொண்டு வந்து விட்டுவிட்டு, மாமனார் மாமியாரிடம் நீங்கள் மேலும் வரதட்சணை கொடுத்தால் தான் உங்கள் பெண்ணோடு சேர்ந்து வாழ்வேன் என கூறி அவர்களை தகாத வார்த்தையில் திட்டியுள்ளார் பிரசாந்த்.

இதனால் மனவேதனை அடைந்த அப்பெண் நடவடிக்கை எடுக்க கோரி லால்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இருப்பினும் போலீசார் குடும்ப பிரச்சினை தானே என புகாரை கிடப்பில் போட்டுவிட்டு நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்துள்ளனர். இதனையடுத்து அப்பெண் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமாரிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கும்படி முறையிட்டுள்ளார். இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் மன வேதனைக்கு ஆளான பெண் தனது பெற்றோருடன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தியத்திற்கு சென்று புகாரை ஏற்று விசாரணை நடத்தும்படி அழுது புலம்பியுள்ளார். அவரை போலீசார் கண்டு கொள்ளவில்லை இதனால் ஆத்திரமடைந்த அவர், ஒரு வயது பெண் குழந்தை மற்றும் பெற்றோர் ஆகியோருடன் புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர் கார்த்திகேயனியை கண்டித்து அனைத்து மகளிர் காவல்நிலையம் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த லால்குடி சரக காவல் துணை கண்காணிப்பாளர் அஜய் தங்கம் காவல்நிலையத்திற்கு வந்து இளம்பெண், அவரது பெற்றோரிடம் விசாரணை செய்து, புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதி அளித்ததின் பேரில் தர்ணா போராட்டத்தினை அவர்கள் கைவிட்டனர். பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததை தட்டிக்கேட்டதால் தனக்கு வரதட்சணை கொடுமை அளித்த கணவன் மீது நடவடிக்கை எடுக்ககோரி பெண் குடும்பத்துடன் காவல்நிலையம் முன் போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: குடிநீரில் மலம் கலந்த விவகாரம்; 20 பேருக்கு சம்மன் - விசாரணை தீவிரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.