ETV Bharat / state

குளு குளு குளியல்.. மவுத்தார்கன் இசை.. திருச்சியில் யானைகள் செய்த சேட்டை வீடியோ!

author img

By

Published : Apr 1, 2023, 10:22 AM IST

திருச்சி எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில், உள்ள யானைகள் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் தினமும் 3 வேளை குளு குளு குளியல் போடுகின்றன. மேலும் இந்த முகாமில் பராமரிக்கப்படும் யானைகளை பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Elephants bathed excitedly to beat the summer at the Trichy MR Palayam Elephant Sanctuary
திருச்சி எம்.ஆர் பாளையம் யானைகள் காப்பகத்தில் கோடையை சமாளிக்க குளு குளு குளியல் போட்ட யானைகள்

திருச்சி எம்.ஆர் பாளையம் யானைகள் காப்பகத்தில் கோடையை சமாளிக்க குளு குளு குளியல் போட்ட யானைகள்

திருச்சி: சிறுகனூர் அடுத்து எம்.ஆர்.பாளையம் காப்புக் காட்டில் ரூ.2 கோடி செலவில் 19.80 ஹெக்டேர் பரப்பளவில் யானைகள் மறுவாழ்வு மையம் 2019 ஆம் ஆண்டு தமிழக வனத்துறை சார்பில் தொடங்கப்பட்டது. சரியான பராமரிப்பு இல்லாத யானைகளைக் கொண்டு வந்து வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. முதலில் மதுரையிலிருந்து மலாச்சி என்ற யானை எம்.ஆர்.பாளையத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

பிறகு ஒவ்வொரு யானையாகக் கொண்டுவரப்பட்டு தற்போது மல்லாச்சி 38, இந்து 36, ஜெயந்தி 25, சந்தியா 48, கோமதி 69, இந்திரா 61, சுமதி 56, கீரதி 63/ ரூபாலி 22 என 9 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. யானைகளுக்கு நீர் என்றால் அலாதி பிரியம். நீரோடைகளிலும் சரி, தேங்கிய குட்டைகளிலும் சரி யானைகளை அங்கே அழைத்துச்சென்று விட்டால் போடும் கும்மாளத்திற்கும் குதூகலத்திற்கும் அளவே இல்லை.

தற்போது வெயில் காலம் தொடங்கி விட்டதால் எம்.ஆர்.பாளையம் காப்புக் காட்டில் 9 யானைகளும் காலை, மதியம், மாலை என மூன்று நேரங்களிலும் யானைகளுக்கு என பிரேத்தியமாக நீச்சல் தொட்டிகளுக்கு யானைகள் வருவதற்கான சாய்தளமும் அமைக்கப்பட்டுள்ள மூன்று தொட்டிகளிலும் 9 யானைகளும் குதுகலத்துடன் உற்சாக குளியல் போட்டு நீந்தி விளையாடி மகிழ்கின்றன.

மேலும் சவர் குளியலிலும் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்து வருகிறது. அதிரும் ரூபாலி, ஜெயந்தி இரண்டு யானைகளும் படு சுட்டியாக நீரில் விளையாடி மகிழ்ந்து வருகின்றன. அதோடு மட்டுமல்லாமல் யானைகளின் கால்களை சுத்த செய்வதற்கும் சிறிய தொட்டி அமைக்கப்பட்டு அதில் யானைகள் குளித்தபின்பு 10 நிமிடம் நின்று விட்டுத் தான் செல்கிறது.

மேலும் வெயிலிருந்து பாதுகாப்பதற்கு மண் குளியலில் உற்சாகமாக மண்ணை அள்ளி முதுகில் போட்டு விளையாடி வருகிறது. மேலும் யானை பாகன் சொல்லிற்க்கு ஏற்ப மவுத்தார்கன் வாசித்து விளையாடி மகிழ்கின்றன. வெயில் அதிகமாக இருப்பதால் யானைகளுக்கு தர்பூசனி, வாழைப்பழம், முலாம்பழம், முட்டைகோஸ், பசுந்தாள், என பல்வேறு வகையான பழங்கள் கொடுப்பதால் உற்சாகமாகக் குளித்த பின்பு சாப்பிட்டு ஜாலியாக விளையாடி வருகிறது.

காப்புக் காட்டில் ஒன்பது யானைகளையும் பராமரிப்பதற்காக வாகனங்கள் உள்ளன. மேலும் இவை அனைத்துமே திருச்சி மண்டல வனத்துறை அலுவலர் சதீஷ் மேற்பார்வையின் கீழ் வனத்துறை அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர். யானைகள் குதூகலமாகக் குளிப்பதை, விளையாடுவதைப் பார்க்கப் பொதுமக்களை அனுமதித்தால் பொதுமக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள், இதற்கு வனத்துறையினர் பொது மக்களுக்கு அனுமதி அளிப்பார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படிங்க: "பாம்பின் பற்களை பிடுங்குவதில் தவறில்லை" ஏஎஸ்பி பல்வீர் சிங்குக்கு ஆதரவாக பேனர்.. நெல்லை சம்பவத்தில் திடீர் திருப்பம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.